திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என் பொண்ணு துருவ் விக்ரமுக்கு ஜோடியா? கொந்தளித்த ரோஜாவின் கணவர்

சினிமாவில் பொதுவாக நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வருவது என்பது இயல்பான ஒரு விஷயம். அன்று முதல் இன்று வரை சினிமாவில் உள்ள பிரபலங்கள் கடைபிடித்து வரும் முக்கிய கடமையாக செய்து வருகிறார்கள். இது அனைத்து துறைகளிலும் முக்கியமாக அரசியலிலும் நடக்கும். இதன்படி பெரிய நடிகர்களின் வாரிசுகள் நடிக்க வந்து பல சாதனைகள் செய்து திறமைகளால் ஜெயித்து வருகின்றனர்.

என்னதான் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் வாரிசுகளை சினிமாவில் வாய்ப்புகளை எளிதாகப் பெற்று தந்தாலும். அவர்களின் திறமைகளை வைத்து ஜெயிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.அதற்கு பல எடுத்துக்காட்டுகள் நம் சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம். இதற்கு மாறாக சில நடிகர்,நடிகைகள் தனது வாரிசுகளை சினிமா வாசனையே இல்லாத அளவிற்கு படிப்பை மட்டும் கொடுத்து அவர்களை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சின்னிஜெயந்த் அவர்களின் மகன் இன்று ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.

Also Read: ஹீரோயினாக மளமளவென வளர்ந்து நிற்கும் வாரிசு நடிகை.. நாசுக்காக ஸ்கெட்ச் போடும் ரோஜா

இதேபோல் தற்போது தமிழ் நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் அரசியலில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது மகள் அன்சுமாலிகா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக போகிறார் என்றும் இவர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் முக்கியமான youtube சேனலில் கூறியிருந்தார்கள்.அது நம்பி பல ஊடகங்கள் இதை செய்தியாக வெளியிட்டு வந்தனர்.

இப்போது ரோஜாவின் கணவர் ஆர்.கே செல்வமணி அவர்கள் கோபமாக பேசி இருக்கிறார். யார் சொன்னது எனது மகள் சினிமாவுக்கு வர போகிறார் என்று அவரைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு. அவள் இப்போதுதான் படிப்பை முடித்து அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் யுனிவர்சிட்டி கம்ப்யூட்டர் சயின்ஸ் நான்கு வருட படிப்பு அங்கு தங்கி படிக்கப் போகிறார். மேலும் தி ஃபிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இது தவிர 2021 சிறந்த சமூக பொறுப்பாளர் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

Also Read: கின்னஸ் சாதனை படைத்த ரோஜா.. ஒரே நேரத்தில் 3000 கிளிக்

அன்சுமாலிகா நன்றாக படிக்கக் கூடியவர். அவருக்கு சமூக சேவைகள் மற்றும் வேறு சிந்தனைகள் இருப்பதால் அவருக்கு சினிமா என்பது பிடிக்காது. இதை தெரிந்து கொள்ளாமல் பல ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. எங்களிடம் கேட்டிருந்தால் நாங்களே சொல்லி இருப்போம் என்று ஆர்.கே.செல்வமணி அவர்கள் கோபத்துடன் கூறினார்.

சில செய்திகள் சினிமாவில் பிடித்த நடிகர்களின் வாரிசுகள் வருவது பல ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். இதை விசாரிக்காமல் அவர் நடிக்க வருகிறார் இவர் வாரிசு நடிக்க வருகிறார்கள் என்று கூறுவது நடிகர்களின் கோபத்திற்கு ஆளாக கூடும். இப்படி பொய் கூறுவதால் படிக்க ஆசைப்படும் வாரிசுகள் கூட நடிக்க ஆசை வந்துவிடும் போல தோன்றுகிறது.

Also Read: முதல்வருக்கு முத்தம் கொடுத்த ரோஜா.. மேடையில் சலசலப்பை உண்டாக்கிய சம்பவம்

Trending News