புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட சர்வைவர் 2 போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் நடத்தும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இரண்டாவதாக இந்திரஜா வெளியேறியுள்ளார். கடந்த வாரம் இந்திரஜா, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ஆகிய மூவர் ட்ரைபில் இருந்து வெளியேறி மூன்றாம் உலகிற்கு சென்றனர்.

அங்கே அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த மூவரில் இந்திரஜா சேப் ஆனதால் சிருஷ்டி டாங்கே மற்றும் காயத்ரிக்கு டாஸ்க் ஒன்று தரப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்கள் இந்திராஜாவுடன் மோத வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் காயத்ரி மற்றும் சிருஷ்டி டாங்கே இடையிலான மோதலில் காயத்ரி வெற்றி பெற்றார்.

இதனால் சிருஷ்டி டாங்கே முதல் போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் ட்ரைபில் பஞ்சாயத்தில் வேடர்கள் வந்தனர். இதில் பார்வதி வெளியேற வேண்டும் என்று சக போட்டியாளர்கள் அனைவரும் வாக்களித்தனர். அதனால் பார்வதி ட்ரைபில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு சென்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்திரஜா மற்றும் காயத்ரிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் காயத்ரி வெற்றி பெற்றார் தோல்வி அடைந்த இந்திரஜா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.

robo-indraja
robo-indraja

தற்பொழுது மூன்றாம் உலகத்தில் இருக்கும் காயத்ரி மற்றும் பார்வதிக்கு அடுத்ததாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும் இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

மேலும் தனது பேச்சின் மூலம் அதிகம் வெறுக்கப்படும் நபரான பார்வதி வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News