வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரதீப்பின் 3 படங்கள் திருட்டுப் படமா?. மாட்டிக்கொண்டு முழிக்கும் விக்னேஷ் சிவன்

Pradeep ranganathan movies: இளசுகளின் பேவரைட் இயக்குனராக பார்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன் கையில் எடுத்த படங்கள் எல்லாமே திருட்டுப் படங்கள் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இப்போது கடைசியாக அந்த ராசி விக்னேஷ் சிவனையும் பிடித்து விட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 பட வாய்ப்பு கைநழுவி சென்றதால் பிரதீப்பை வைத்து எல்ஐசி என்ற படத்தை எடுக்க படத்திற்கான பூஜை எல்லாம் போட்டு படப்பிடிப்பை தொடங்கி விட்டார். இப்போது அதுக்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான கோமாளி படம் வித்தியாசமான கதைகளை கொண்டதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த படத்தின் கதை ஒரு திருட்டு கதை என்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் அசிஸ்டன்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய கதை தான் கோமாளி படம் என்று பிரச்சனை செய்தார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பணத்தை கொடுத்து சரி கட்டினார்.

Also Read: பிரதீப் ரங்கநாதனுக்கு ஏற்பட்ட திருட்டு பட்டம்.. இதில் விக்கியும் சேர்ந்தா செமையா இருக்கும்!

பிரதீப் ரங்கநாதனை விடாமல் துரத்தும் திருட்டு படங்கள்

அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக கலக்கிய லவ் டுடே படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இந்த படம் கவிஞர் அறிவுமதியின் கவிதை தான் என்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அதையும் ஒரு வழியாக ஆப் செய்து விட்டனர். இப்போது விக்னேஷ் சிவன்- பிரதீப் கூட்டணியில் உருவாகும் எல்ஐசி படத்தின் டைட்டிலே வேறொருத்தருடையதாம். இயக்குனர் எஸ் எஸ் குமார் புதிதாக எடுக்கும் படத்திற்கு 2015 ஆம் ஆண்டு எல்ஐசி என்ற டைட்டிலை பதிவு செய்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இவரை எப்படியாவது சரி கட்ட வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரை எல்லாம் அனுப்பி, அவரிடம் பேசி பார்த்தார். அவர் வழிக்கு வரதா இல்ல, அதேசமயம் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்க நாதனை வைத்து எல்ஐசி என்ற படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார். ஆனால் டைட்டில் பிரச்சினையை தான் எப்படி சரி செய்ய போவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை

Trending News