புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அந்தகன் ரீமேக் படத்தால் நொந்துபோன பிரசாந்த்.. மொத்தத்தையும் முடிச்சு கட்டிய பிரபலம்!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் சிறப்பாக இல்லாத பிரசாந்த் கண்டிப்பாக அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் விட்டதை பிடித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் படமும் கைவிடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வருத்தத்தை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்டு தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார். அப்பவும் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் பெரிதாக அவரால் மாஸ் ஹீரோவாக சோபிக்க முடியவில்லை.

மீண்டும் தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக சினிமாவில் கொஞ்ச நாட்கள் விலகியிருந்த பிரசாந்த் தற்போது விட்ட இடத்தை பிடிக்க மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் வெளிவந்த பிரசாந்த் படங்கள் எதுவுமே பெரிய அளவில் பேசப்படவில்லை.

andhagan-cinemapettai
andhagan-cinemapettai

இதனால் நீண்ட நாட்களாக ஒரு சிறப்பான திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த பிரசாந்த், ஹிந்தியில் சமீபத்தில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். அந்தகன் என்ற பெயரில் உருவாகி வரும் அந்த படத்தை முதலில் மோகன்ராஜா இயக்க இருந்த நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் என்பவர் இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் தற்போது அந்தகன் படத்தில் ஒப்பந்தமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் ஜேஜே பேடரிக் போன்றோர் அந்த படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கதையில் செய்ய சொன்ன திருத்தமாம்.

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக மொத்த படக்குழுவும் கைவிடும் அளவிற்கு சென்றுவிட்டதாம். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. மேலும் எப்படியாவது ரீ என்ட்ரி கொடுத்து விடலாம் என நினைத்திருந்த பிரசாந்த் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து மருகிக் கொண்டிருக்கிறாராம் டாப் ஸ்டார்.

Trending News