வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னது அஜித்தின் விட பிரின்ஸ் அதிக வியாபாரமா? இணையத்தில் படு கேவலமாக உருட்டும் ரசிகர்கள்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படம் திரையரங்குகளில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஏனென்றால் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. ஆனால் பிரின்ஸ் படம் எதிர்பார்க்காத வண்ணம் மண்ணை கவி உள்ளது. இந்நிலையில் தற்போது அஜித்தின் துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர உள்ளது.

Also Read : ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகும் சிவகார்த்திகேயன்.. திடீர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்

ஆகையால் துணிவு படம் வெளிநாட்டு வியாபாரத்தில் பிரின்ஸ் படத்திற்கு குறைவாக வியாபாரம் செய்துள்ளதாக இணையத்தில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. வேண்டுமென்றே படு கேவலமான இந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செய்து வருவதாக அஜித் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

எப்போதுமே விஜய், அஜித் ரசிகர்களிடையே பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போது அஜித், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் பூதாகரமாக பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பிரின்ஸ் படம் வெளிநாடுகளில் 13 கோடி வியாபாரம் ஆனதாகவும், துணிவு படம் 12 கோடி வியாபாரமாகி உள்ளதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : துணிவு ஜெயிக்கலனா உன் கேரியர் கிளோஸ்.. கமல் போட்ட கண்டிஷனால் பதறிப்போன வினோத்

சிவகார்த்திகேயன் ரசிகர் என்பதில் பெருமை கொள்வதாகவும், அஜித் இவரிடம் தோற்றுவிட்டதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இந்தச் செய்தி முற்றிலும் பொய்யான தகவல் தான். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இவ்வாறு ஒரு புரளியை கிளப்பி உள்ளனர்.

ஏனென்றால் பிரின்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் மோசமான விமர்சனங்கள் வந்ததால் தான் தோல்வியை சந்தித்தது என்று கூறப்படுகிறது. ஆகையால் துணிவு படத்தின் மீதும் இவர்கள் மோசமான பிம்பத்தை வைக்க முற்படுகிறார்கள்.

Also Read : விஜய் கூட மோதியே தீருவேன்.. இயக்குனரை துணிவுடன் விரட்டிப் பிடிக்கும் அஜித்

Trending News