உதயநிதி இப்போது சினிமாவை ஓரம்கட்டி விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சினிமாவை சார்ந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி சில விஷயங்களை பேசி இருந்தார். அதாவது சமீபகாலமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்க நினைத்திருந்தேன்.
ஆனால் இதற்கான அழைப்பு வந்த போது தன்னால் தவிர்க்க முடியவில்லை என்று கூறினார். மேலும் திமுக இவ்வளவு வளர்ச்சி அடைவதற்கான காரணத்திற்கு சினிமாவும் முக்கிய பங்கு உண்டு. அறிஞர் அண்ணா சினிமாவின் மூலம் பல விஷயங்களை சொல்லி உள்ளார். அதேபோல் எனது தாத்தா முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்தி படத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சி செய்திருந்தார்.
Also read: உதயநிதிக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்ட இயக்குனர் .. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கடைசி படம்
தமிழ் சினிமாவில் அவருடைய பங்கு அழைப்பறியாதது. அதேபோல் எனது தந்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் சினிமாவில் ஆற்றியுள்ளார். அந்த வரிசையில் இப்போது நானும் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு தயாரித்துள்ளேன். அதுமட்டுமின்றி பத்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன்.
மேலும் எனது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை விநியோகம் செய்து வருகிறேன். ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு 2000 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக போட்டிருந்தார்கள். இதைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
Also read: கண்ணை நம்பாதே உதயநிதிக்கு வெற்றியா, தோல்வியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்
ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அதேபோல் விநியோகஸ்தருக்கு எவ்வளவு வரும் என்பதும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். ஆனால் ஏதோ வாய்ப்புளித்தது, மாங்காய் புளித்தது போல வாய்க்கு வந்தபடி சில பத்திரிக்கைகளில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.
ரெட் ஜெயன்ட் எப்போதுமே நியாயமாக உள்ளதால் தான் தயாரிப்பாளர்கள் தங்களை நாடி வருவதாகவும் உதயநிதி கூறியிருந்தார். மேலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது.