ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சத்தமில்லாமல் கல்யாணத்தை முடித்தாரா சனம் ஷெட்டி? நெற்றியில் குங்குமம் வைத்து வந்ததால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமாகும் நடிகர் நடிகைகளை விட ஏதாவது ஒரு காதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகும் நடிகர் நடிகைகள் தான் அதிகம். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் சனம் ஷெட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன் என்ற போட்டியாளரின் காதலியாக கருதப்பட்டவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் சென்றதும் வெளியில் சனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது இருவருக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பின்னாளில் இதுவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்து இருவருக்கும் உண்டான காதல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தர்ஷன் தன்னுடைய வழியில் டாட்டா காட்டி விட்டு சென்று விட்டார்.

அதனைத் தொடர்ந்து சனம் ஷெட்டி சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். முதலில் வாயாடியாக பார்க்கப்பட்ட சனம் செட்டி அடுத்த கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களை நட்பைப் பெற்றார்.

sanam-shetty-cinemapettai-01
sanam-shetty-cinemapettai-01

இடையில் விஜய் டிவி சனம் ஷெட்டியை பாதி போட்டியில் இருந்து வெளியே அனுப்பியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவி செய்த சதியால் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சனம் செட்டி நெற்றியில் குங்குமத்துடன் வலம் வந்தார்.

பார்ப்பவர்கள் அனைவரும் சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டதா என நினைக்கையில் கர்நாடகாவில் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம் தான் என தகவல்கள் கிடைத்துள்ளது. சனம் ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.

Trending News