வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேடையில் அட்லி பூரிப்பில் பேசியதை துண்டாக தூக்கிய சன் டிவி.. விஜய் மீது இப்படி ஒரு கொலை வெறி தாக்குதலா!.

Actor Vijay: ஒரு மனுஷன் சினிமாவில் வளர்ந்து விடக்கூடாது, அப்படியே வளர்ந்து விட்டாலும் அவர் தனக்கு சாதகமாகவே செயல்பட வேண்டும் என நினைப்பதால் தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகிறது. அப்படி தான் இப்போது விஜய் மீது, இப்படி ஒரு கொலவெறியில் இருக்கிறார்களா என்பதை தளபதி ரசிகர்கள் புரிந்து கொண்டு, ஆதங்கப்படும் அளவுக்கு தொடர் சம்பவம் நிகழ்கிறது.

அதன் உச்சகட்டமாக இப்போது ஜவான் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது அட்லி விஜய்யை பற்றி பூரிப்புடன் பேசி இருந்தார். ராஜா ராணி படத்திற்கு பிறகு விஜய் அண்ணா உடன் பிகில், தெறி, மெர்சல் என தொடர் வெற்றிகளை கொடுத்த பின் என்னுடைய வட்டத்திற்குள் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாலிவுட்டில் ஜவான் படத்தை எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததும், ‘இதை கண்டிப்பாக நீ செய்ய வேண்டும்’ என விஜய் அண்ணா கொடுத்த ஊக்கம் தான் இந்த படத்தை கையில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என தளபதியை அட்லி புகழ்ந்து பேசினார்.

Also Read: ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், இறைவன் தயவால் ஆளுநர் பதவி கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பிய உடன்பிறப்பு

ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த சன் டிவி அட்லி விஜய்யை பற்றி பேசியதை எல்லாம் எடிட் செய்து நீக்கிவிட்டனர். அந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றவர்கள் மூலம் அட்லி தன்னுடைய அண்ணனாக நினைக்கக்கூடிய விஜய்யைப் பற்றி பூரிப்புடன் பேசினார் என்பது, தற்போது வெளியாகி சன் டிவி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு விஜய் மீது வன்மத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் தற்போது சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகளாக இருக்கும் விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய மறுக்கிறார்.

இதனால் கடும் கோபத்தில் இருக்கும் சன் டிவி எந்தெந்த வகையில் எல்லாம் விஜய்யை தாக்க முடியுமோ அதை கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் வாரிசு படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்று அந்த படத்தின் நள்ளிரவு ஒரு மணி ஷோவை நீக்கினார். அது மட்டுமல்ல இந்த படத்திற்கு மிகக் குறைந்த ஸ்கிரீன்ஸ் மட்டுமே கொடுத்து படத்தின் வசூலுக்கு பங்கம் விளைவித்தார்.

Also Read: தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகும் ரஜினி.. ஐஸ்வர்யாவால் விழி பிதுங்கி நிற்கும் சூப்பர் ஸ்டார்

அதே போல் கலாநிதி மாறனும் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது ரஜினி தான் சூப்பர் ஸ்டார் மற்றவர்கள் யாரையும் அவருடன் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் 72 வயதிலும் பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுடைய படத்தில் ரஜினியை கமிட் செய்ய காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும் போது அவர்தான் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என விஜய் மீது இருக்கும் வன்மத்தை வெளிப்படையாக காட்டினார்.

இப்போது சன் டிவி ஜவான் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அட்லி விஜய்யை பற்றி பெருமையாக பேசியதை நீக்கி வெளியிட்டிருப்பது தளபதியின் மீது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொலை காண்டில் இருப்பதாக ஊரே பேசுவதை உண்மையாக்கி விட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் விஜய் கடந்த 2026 ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைப்பது தான். தற்சமயம் தமிழகத்தில் வலுமிக்க அரசியல்வாதிகளாக இருக்கக்கூடிய ஆளும் கட்சிக்கு போட்டியாக விஜய் வந்து விடுவாரோ என்ற பயத்தை தான் இப்படி எல்லாம் தங்களுடைய கோபமாக வெளிப்படுத்துகின்றனர்.

Also Read: 4 கார்களை ஆப்சனாக கொடுத்த கலாநிதி.. இதுதான் ஜாக்பாட் என கூச்சப்படாமல் வாங்கிய நெல்சன்

Trending News