வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏமாற்றுகிறதா நடிகர் சங்கம்? நாசர், கார்த்திக், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் சினிமாவுக்கு என்று மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது. சினிமா நடிகர்களை தெய்வமாக கொண்டாடுவதும் இவர்கள்தான். இந்த நடிகர்கள் அதிக சம்பளத்தை வாங்கி யாருக்கு என்ன செய்வார்கள் என்று யாருக்குமே தெரியாது. இவர்கள் நடிகர் சங்கம் என்ற பெயரில் வைத்துக்கொண்டு அதில் தேர்தல் நடத்தி தலைவர், பொருளாளர் செயலாளர் என்று பெருமைக்காக அந்த பதவிகளை அனுபவித்து  வருகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் அடிமட்ட நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள் பல காலங்களாக எந்த உதவியும் கிடைக்காமல் பெயருக்கு நாங்களும் நடிகர் சங்கத்தில் இருக்கிறோம் என்று சொல்லி வருவார்கள்.சமீபத்தில் போண்டாமணி அவர்கள் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் எனக்கு சிறுநீரகம் செயல் படவில்லை நான் அரசு மருத்துவமனையில் இருக்கிறேன் என்னை யாராவது காப்பாற்றுங்கள். என் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அதனால் நான் உயிரோட இருக்கணும். என் கிட்ட பணம் இல்ல யாராவது உதவி செய்யுங்கள் என்று வீடியோ வெளியிட்டார்.

Also Read: எஸ் ஜே சூர்யாவுக்கு தலைவலியாக வந்த விஷால்.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா

 அதன் விளைவாக அமைச்சர்கள் ஒரு சில நடிகர்கள் அவரைச் சந்தித்தார்கள். அதில் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் மீதியை நான் பார்த்துகொள்கிறேன் பயப்பட வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டார். அடுத்ததாக தனுஷ் 1 லட்சம்  கொடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் அவர்களும் 1 லட்சம்  கொடுத்து இருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய செய்தி.

ஆனால் போண்டாமணி உடன் நடித்த நடிகர்கள் இதுவரை யாரும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை வடிவேலு கூட என்னால் முடிந்த உதவி செய்வேன் என்று வாயால் சொல்லி இருக்கிறார் இன்னும் செய்யவில்லை. இவருக்கு உதவி செய்த நடிகர்கள் யாரும் இவருடன் நடிக்கவில்லை பலவும் இல்லை ஆனால் அவர்கள் செய்திருக்கிறார்கள். இது முக்கியமாக நடிகர் சங்கம் என்ன செய்தது என்றால் ஒன்றுமில்லை.

Also Read: விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா

பெயருக்காக கூட ஆறுதலுக்காக கூட அவரிடம்  பேசவில்லை. தலைவர் விஷால், நடிகர் கார்த்தி, நாசர் இவர்கள் அனைவரும் கூட்டமாகவே நின்று இந்த தேர்தலை நடத்தி வெற்றி பெற்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள் அதை செய்யப்போகிறேன் இதை செய்ய போகிறேன் என்று ஆனால் இன்று விஷால் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியவில்லை பொன்னியின் செல்வன் படத்திற்காக கார்த்தி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறாள் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை இவர்கள் எதற்காக நடிகர் சங்கத்தை இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் இவர்கள் எதற்காக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இப்படி ஒரு அடிமட்ட நடிகனுக்கு சிறு உதவி செய்யாத நடிகர் சங்கம் அதில் இவர்களுக்கு பதவி வேறு இதெல்லாம் பார்க்கும்போது ஒரு எளிமையான மனிதன் கூட இவர்களை பல கேள்வி கேட்பார்கள் எதற்காக இப்படி ஏமாற்றுகிறீர்கள்? அவர்கள் காதுகளுக்கு இது கேட்கவில்லையா இல்லை கேட்டு கேளாமல் வேடிக்கை பார்க்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இதில் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் திரட்டுவது அரசிடம் நிதி உதவி கேட்பது என்று இது ஒரு பெரும் நகைச்சுவையாக செய்து கொண்டிருக்கிறார்கள் இனிமேல் மக்கள் இதை புரிந்து கொண்டும் தக்க பாடம் நடிகர்களுக்கு புகட்டுவார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.

Also Read: உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

Trending News