
Vijay : விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படமாக எதிர்பார்க்கப்படுவது ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த KVN நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆரம்பத்தில் இந்த நிறுவனம் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இப்போது படங்களையும் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டது.
இதனால் எந்த பரிவர்த்தனையும் இந்த நிறுவனத்தால் செய்ய முடியவில்லை. மேலும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு 22 நாட்களுக்கு மேல் சம்பளமும் கொடுக்கப்படாமல் இருந்துள்ளது.
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறுத்துவதற்கு அரசியல் காரணமா.?
இதில் தொழிலாளர் சங்கம் தலையிட்டு இதற்கு மேல் படப்பிடிப்பு நடத்தினால் சம்பளமில்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் படப்பிடிப்பை நிறுத்தினால் அவர்கள் வேறு படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.
அதனால் ஜனநாயகன்ப படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த நிறுவனத்திற்கு ஐடி ரைட் வருவதற்கான காரணம் விஜய்யை முடக்க சதியா என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இப்போது அரசியலில் இறங்கி உள்ள விஜய் தன்னுடைய மேடைப்பேச்சுகளில் நேரடியாகவே மற்ற கட்சிகளை தாக்கி பேசி வருகிறார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆகையால் அரசியல் அழுத்தம் காரணமாக கூட ஜனநாயகன் படப்பிடிப்பை நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த ஐடி ரைட் தான் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.