வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2ம் பாகம் வரப்போகுதா.? பாபா ரீ ரிலீஸ் ஒரு விமர்சனம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த பாபா திரைப்படம் மீண்டும் புது பொலிவுடன் வெளியாகி இருக்கிறது. நாளை 72வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டாலின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும். இதை அவரே பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் புதுசா என்ன இருக்கிறது என்று இங்கு காண்போம். 20 வருடங்களுக்கு முன்பே பலரும் பார்த்து ரசித்த இந்த திரைப்படம் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியம் தான். அதிலும் நேற்று கடும் மழையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இந்த படத்தை காண தியேட்டர்களில் திரண்டிருந்தது ரஜினியின் மவுசை தெளிவாக காட்டுகிறது.

Also read: பாபா ரீ-ரிலிஸில் மாற்றப்பட்ட முக்கியமான காட்சிகள்.. கிளைமாக்ஸில் வைத்த அதிரடி ட்விஸ்ட்

இதற்கு முன்பு பாபா திரைப்படம் மூன்று மணி நேரம் ஓடும்படி வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த ரீ ரிலீஸில் 30 நிமிட காட்சிகளை எடிட் செய்திருக்கின்றனர். மேலும் அப்போது ரஜினிக்கு 7 முறை மந்திரம் உபயோகிக்கும் படி வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது அதை குறைத்து ஐந்து முறை மட்டுமே மந்திரத்தை உபயோகிக்கும் படி காட்டியிருக்கிறார்கள்.

அதில் ரம்யா கிருஷ்ணன் வருவது உட்பட சில காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இறுதி காட்சியையும் இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதை தான் இந்த படத்திலும் காட்டி இருந்தார்கள். ஆனால் இப்போது அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார்.

Also read: பாட்ஷா ரஜினியுடன் வெளிவந்த முத்தையாவின் முத்துராமலிங்கம் பட போஸ்டர்.. வெறிபிடித்த சிங்கம் போல இருக்கும் ஆர்யா

அதனால் இறுதி காட்சியை அம்மா சென்டிமென்ட் வைத்து முடித்திருக்கிறார்கள். இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த ரீ ரிலீஸ் முன்பை விட அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இப்பொழுது வெளியானதற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.

என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ரஜினி இருக்கிறாராம். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தன் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த படத்திற்கு இப்போது எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காக தான் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பும் கிடைத்துள்ளதால் கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மாண்டஸ் புயலை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்.. 20 வருடங்களுக்கு பிறகும் வரலாறு படைக்குமா பாபா ரீ ரிலீஸ்?

Trending News