ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு மாற்றமா? ஆச்சரியத்தில் உறைந்த அருள்மொழி வர்மன்

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருக்கும் அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகமானது மட்டுமல்லாமல் மார்க்கெட்டும் எகிறி விட்டது. அதிலும் ஜெயம் ரவி கொஞ்சம் கூடுதலாகவே மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

இதனால் அவருடைய தாய், தந்தை மற்றும் மனைவியுடன் சேர்ந்து பல சுவாரசியமான பேட்டிகளை அளித்து கொண்டிருக்கிறார். அவை தற்போது சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா! என அவரே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு தரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

Also Read: பொன்னியின் செல்வனுக்கு இப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது.. ஹோட்டலில் நடந்த உண்மையை கூறிய பூங்குழலி

தற்போது ஜெயம் ரவியின் மார்க்கெட் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எகிறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் அருள்மொழி வர்மன் என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்து பட்டையை கிளப்பியது தான். இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு ஜெயம் ரவியின் படத்திற்கான ‘நான் தியேட்டரிக்கல் பிசினஸ் (Non Theatrical business)’ மட்டும் 60 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு ஜெயம் ரவியின் படங்களுக்கு வெறும் 35 கோடி மட்டுமே பிசினஸ் ஆகும்.

மேலும் ஐசரி கணேசன் அவர்களின் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் படம் தான் ஜீனி. ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பிசினஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல ஜெயம் ரவிக்கு நிறைய படங்கள் வரிசை கட்டி காத்திருக்கிறது.

Also Read: வெற்றிமாறனின் சக்சஸ் படத்தை எடுக்க ஆசைப்பட்ட மணிரத்னம்.. விஷயம் தெரிந்து முந்தி கொண்ட சாமர்த்தியம்

அதில் ஒன்றுதான் தனி ஒருவன் 2. 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் முதல் பாகம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவிக்கு பல படங்கள் தோல்வியை கொடுத்ததால் அவருடைய அண்ணனும் தனி ஒருவன் படத்தின் இயக்குனருமான எம். ராஜா இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயக்கம் காட்டினார்.

இப்போது மறுபடியும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் 2 படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கின்றனர். இவ்வாறு பொன்னியின் செல்வன் படம் ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவருடைய படங்கள் முன்பை விட ‘நான் தியேட்டரிக்கல் பிசினஸ்’ மட்டும் இரண்டு மடங்கு அதிகமாகி விட்டதால் அவருக்கு இனி நல்ல காலம் தான். அதனால் தற்சமயம் ஜெயம் ரவி இன்ப அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

Also Read: விட்ட மார்க்கெட்டை பிடித்த திரிஷா.. 40 வயதிலும் கைவசம் இருக்கும் 6 படங்கள்

Trending News