புதன்கிழமை, நவம்பர் 27, 2024

அர்ஜென்டினா வெற்றிக்கும் கமலின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கும் இப்படி ஒரு கனெக்ஷானா? என்னமா யோசிக்கிறாங்க!

22-வது உலக கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியிடம் மோதினர். மிகப் பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி கோப்பையை பிரான்சிடம் இருந்து பறித்துச் சென்றது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது உலக கோப்பை வெற்றியாகும்.

இந்த வெற்றியின் கதாநாயகன் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்த வெற்றியின் பயணத்தில் நம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் சேர்ந்து பயணித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?! அர்ஜென்டினாவிற்கும், நம் கோலிவுட்டிருக்கும், கால்பந்து உலகக் கோப்பைகும் கண்ணம்மாஎன்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் இதோ?

Also Read: தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

1978-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் பெரு நாட்டின் உடன் விளையாடி அர்ஜென்டினா முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக மரியோ கேம்பஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே ஆண்டு உலகநாயகன் கமல் நடித்து வெளியான சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

1986-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெஸ்ட் ஜெர்மனியுடன் நடந்த போட்டியில் டீகோ மரடோனா-வின் அசுர ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. அதே சமயத்தில் நம் கோலிவுட்டில் நம் உலகநாயகன் நடித்த புன்னகை மன்னன் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

Also Read: மறக்கமுடியாத 7 டாப் நடிகைகளின் தற்கொலை.. புன்னகை மன்னன் பாணியில் மரணித்த ப்ரத்யூக்‌ஷா

இதேபோல் தற்போது இந்த ஆண்டு(2022) கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் படம் கமலின் திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதேபோல் அர்ஜென்டினா அணியும் மிகப்பெரிய வெற்றி வேட்டை நடத்தியது.

இவ்விரண்டு சம்பவங்களும் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு இடத்தில் ஆனால் ஒரே வருடத்தில் அதன் போக்கில் இயல்பாக நடந்த சம்பவம். நம் ஆட்கள் ஆண்டிப்பட்டிக்கும் அமெரிக்காவிற்குமே முடிச்சு போடுபவர்கள் ஆயிற்றே! அதனால் தான் என்னவோ ஆண்டவருக்கும் அர்ஜென்டினா விற்கும் முடிச்சு போட்டுவிட்டனர். அர்ஜென்டினா-வும் ஏஜன்ட் டினா-வும்!

Also Read: 2022-இல் வில்லன்களாக ஜெயித்த டாப் 5 ஹீரோக்கள்.. ஆரம்பிக்கலாமா என கெத்து காட்டிய விக்ரம் ரோலக்ஸ்

- Advertisement -spot_img

Trending News