வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த் மறைவுக்கு வராததற்கு இப்படி ஒரு காரணமா.? அஜித்தை பற்றி பரபரப்பை கிளப்பிய பிரபலம்

Vijayakanth – Ajith : அஜித் பொதுவாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பிரபலங்களின் இறப்புக்கு கண்டிப்பாக வந்துவிடுவார். அவர் வர முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் அஜித்தின் மனைவி ஷாலினி வந்து கலந்து கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்த போது அஜித் தனது குடும்பத்துடன் துபாயில் இருந்தார்.

மேலும் சென்னை திரும்பிய பிறகு கேப்டனின் நினைவு இடத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அஜித் விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவரது நண்பன் வெற்றி துரைசாமி இறந்த போது முதல் ஆளாக அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையை விஜயகாந்த் இறப்புக்கு மட்டும் ஏன் அஜித் செல்லவில்லை என்ற செய்தி இப்போது பூதாகரம் எடுத்துள்ளது. இது குறித்து சினிமா விமர்சகர் வலைப்பேச்சு சக்திவேல் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதாவது நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு முன்னதாக நடிக்க இருந்தது அஜித் தான். இதற்கான அட்வான்ஸ் தொகையையும் வாங்கி விட்டார்.

Also Read : விஜயகாந்த்க்கு டி-ராஜேந்திரர் இசையமைத்த 3 படங்கள்.. ஏ ஆர் ரகுமானினை மெய்சிலிர்க்க வைத்த மெலடி

அதன் பிறகு பாலா மற்றும் அஜித்திடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சனையாக வெடித்தது. இதனால் அந்த படத்தில் இருந்து அஜித்தை பாலா விலக வைத்தார். ஆனால் அட்வான்ஸ் தொகையை அஜித் கொடுக்க மறுத்தார். எனவே ஹோட்டல் ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் பாலா இருவரும் அஜித்தை தாக்கியதாக அப்போது செய்தி வெளியானது.

மேலும் அதன்பிறகு அட்வான்ஸ் தொகையை அஜித் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. அந்தச் சமயத்தில் விஜயகாந்த் அஜித்துக்கு உதவாதது கூட காரணமாக இருக்கலாம் என வலைப்பேச்சு சக்திவேல் கூறி இருக்கிறார். ஆனால் விஜயகாந்தை பொறுத்தவரையில் தன்னிடம் பிரச்சனை என்று வருபவர்களிடம் தன்னால் முடிந்த உதவியை செய்யக்கூடியவர் தான்.

Also Read : விஜயகாந்த்காக கூட வரல, உயிர் நண்பன் வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்.. காட்டு தீயாக பரவும் ஃபோட்டோ

Trending News