செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Ajith heera: அஜித் தேடி தேடி லவ் பண்ண ஹீரோயினா இது.. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ஹீரா

Ajith heera: இப்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித் ஒரு காலத்தில் பெண்களை வசியம் பண்ணும் அளவிற்கு ஹண்ட்ஸம் லுக்கில் காதல் மன்னனாக இருந்தார். என்ன ஒரு அழகு, கன்னத்தில் குழி விழும் அளவிற்கு ஒரு சிரிப்பு, இத்தனை அழகும் ஒரே ரூபத்தில் இருந்த ஹீரோ தான் அஜித். இவருடைய அழகுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக விழுந்து போயிருந்தார்கள்.

ரசிகர்களே அந்த அளவிற்கு இருந்த பொழுது இவருடன் நடித்த நடிகைகளை பற்றி சொல்லவா செய்ய வேண்டும். இப்படி அஜித் அழகில் மயங்கிய நடிகைகள் எத்தனையோ பேர் இருந்தாலும் அஜித் தேடி தேடி லவ் பண்ண ஹீரோயின் என்றால் அது 90ஸ் கனவு கன்னி ஹீரா தான்.

heera (2)
heera (2)

அஜித்தின் முன்னாள் காதலி

அஜித் மற்றும் ஹீரா கடைசியாக இணைந்து நடித்த படம் தொடரும். இந்த படத்தில் ஹீரா, அஜித்தை துரத்தி துரத்தி காதலித்திருப்பார். ஆனால் உண்மையில் அஜித்திற்கு தான் ஹீரோ மீது அவ்வளவு கொள்ள பிரியம். யாரையும் ஹீரா பக்கத்தில் நெருங்க விடாமல் ஒரு கண்கொத்தி பாம்பாகவே பார்த்துக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம்.

ஏன் கட்டுமஸ்தான் போல் உடம்பை வைத்துக் கொண்டு சரத்குமார் கூட ஹீராக்கு ரூட் விட்டார். ஆனால் அவரையெல்லாம் ஓட விடும் அளவிற்கு அஜித், ஹீராவை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனால் இவர்களுடைய காதலுக்கு ஹீராவின் அம்மா சம்மதம் கொடுக்காததால் பாதியிலேயே இந்த காதல் முடிந்து போய்விட்டது.

heera (1)
heera (1)

அதன் பின் ஹீரா தொடர்ந்து நடித்து வந்தாலும் பெருசாக சொல்லும்படி இவருக்கு எந்த ஒரு பெயரும் கிடைக்காமல் போய்விட்டது. கடைசியாக சுயம்வரம் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து இவருடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அதன் பின் எங்கேயுமே இவரை பார்க்க முடியவில்லை என்று சொல்லும் அளவிற்கு காணாமல் போய்விட்டார்.

அப்படிப்பட்ட ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஹீராவை பார்க்கும் பொழுது என்ன ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறார். தற்போது 52 வயதாகும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு புஸ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி நான்கு வருடங்களிலே இவருடைய திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்.

Trending News