தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வாழ்ந்த 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளப்போவதாக நேற்று சோஷியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டு கோலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா சிம்புவுக்கு போட்ட ட்விட் தான் காரணமா? என ரசிகர்கள் யூகித்துள்ளனர். ஏனென்றால் சினிமாவில் தளபதி விஜய் மற்றும் தல அஜித்துக்கு இடையே போட்டி நிலவுவது போல, ஒரு காலகட்டத்தில் சிம்புவுக்கும் தனுசுக்கும் இடையே சினிமாவில் கடும் போட்டி நிலவி கொண்டிருந்தது.
அப்படி இருக்கும் நிலையில் சிம்புவின் பள்ளி மற்றும் கல்லூரி தோழியான ஐஸ்வர்யாவை சிம்பு காதலித்து வருவதாக முன்பொரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அந்த சமயத்தில் சிம்பு நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. மற்றொரு புறத்தில் தனுஷ் உடைய மூன்று படங்கள் வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருந்தது.
எனவே இரு துருவங்களாக இருந்த சிம்பு-தனுஷ் ரசிகர்கள் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் தனுஷ் தன்னைவிட மூத்த பெண்ணான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் தான் சிம்புவும் ஆண்களை ஏமாற்றி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்பெண்ணை பழிவாங்குவது போன்ற கதைக்களத்தை கொண்ட ‘மன்மதன்’ திரைப்படத்தை அவரே நடித்து இயக்கினார்.
இதனால் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சிம்பு-தனுஷ் இடையே சலசலப்பு இருப்பதாக அவர்களது ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகம் சிம்புவிற்கு வாழ்நாள் சாதனையாளர்கான டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு தனுஷின் கொழுந்தியாள் சௌந்தர்யா சிம்புவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இதனால்தான் தனுஷ் ஐஸ்வர்யாவை விட்டு விலக நினைக்கிறாரா என்றும் ரசிகர்கள் முணுமுணுகின்றனர். ‘இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு’ சௌந்தர்யா வாழ்த்து சொன்னதற்கு ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வது எந்த விதத்தில் சரி என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவை தனுஷுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
உண்மையில் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம் என அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதற்காக இவர்கள் வித விதமான கோணத்தில் காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.