வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் தலைமறைவுக்கு இதுதான் பின்னணியா.? அஜித்தை பார்த்து இப்படியா அட்டகாப்பி அடிப்பது

Actor Sivakarthikeyan: மாவீரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் அப்படியே அஜித்தை அட்ட காப்பி அடித்திருக்கும் விஷயம் வெளிவந்துள்ளது. மாவீரன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு எஸ்கே வெளியில் தலைகாட்டாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை எங்கு பார்த்தாலும் தலையில் மங்கி குல்லா உடன் தான் சுத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: வாய் சவடால், அஜித் படத்தை தரக்குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மறைப்பதற்கு தான் இப்படி குல்லா உடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். எஸ்கே 21-ன் பட கெட்டப் தான் அது. இந்த படம் உண்மையான ஒரு மிலிட்டரி சோல்ஜரின் வாழ்க்கை வரலாறு. அந்தப் படத்தில் கம்பீரமான மிலிட்டரி ஆபீஸராக சிவகார்த்திகேயன் மிரட்ட போகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் போய்க்கொண்டிருந்தது. படம் கிளைமேக்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. படம் முடியும் வரை தொப்பியுடன் தான் சுற்றி திரிவாராம் சிவகார்த்திகேயன். படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், அஜித்தின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி இருக்கிறார்.

Also Read: இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

அஜித்தின் முடி இயல்பாகவே நரைக்க துவங்கியதும் அதற்கு டை அடிக்காமல், எப்படி இருக்கிறாரோ அதேபோலதான் படத்தில் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இது இவருக்கே உரித்தான தனி ஸ்டைல், இதை இப்போது சிவகார்த்திகேயன் அப்படியே காப்பி அடித்துள்ளார்.

அது மட்டுமல்ல எஸ்கே 21 படத்தின் சில காட்சிகளில் குடுமி போட்டும் வருகிறார். அதனால் அந்த லுக் வெளியில் தெரிந்த விடக்கூடாது என குல்லாவுடன் அழைக்கிறார். அஜித் தான் ஒரு ஹீரோவாக முதன் முதலில் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைலை மங்காத்தா படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அதே லுக்கில் தான் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: அஜித்தின் கேரியரை காலி செய்து ப்ளாப்பான 6 படங்கள்.. காசு போட்ட முதலாளி கூட இன்னொரு வாட்டி பாக்க மாட்டாங்க

Trending News