வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி அரசியலை வெறுத்ததற்கு இப்படி ஒரு காரணமா.? ஆன மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க!

Actor Rajini: ரஜினி எந்த அளவிற்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கிறாரோ, அதே மாதிரி அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் பலரும் ஆசையுடன் எதிர்பார்த்தனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அரசியலில் பிரவேசம் பண்ணப் போகிறார் என்ற நிலைமை இருந்தது. ஆனால் திடீரென்று உடல்நிலை காரணமாக எனக்கு அரசியல் ஒத்து வராது என்று முடிவெடுத்து கூறிவிட்டார்.

ஆனாலும் எப்பொழுதும் இவர் பிஜேபி-யின் ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே கொஞ்சம் வருடங்களுக்கு முன் நடித்த படங்கள் ஓடாமல் போனதும், இவர் மேல அதிகமாக கோபத்தில் இருந்ததும் இந்த ஒரு விஷயத்திற்காகத் தான். இதை தெரிந்ததும் ரஜினி ரொம்பவே அமைதியாகிவிட்டார்.

Also read: இப்பவும் 900 தியேட்டர்களில் வெற்றியை கொண்டாடும் ஜெயிலர்.. ஆன விக்ரம் படம் ஓட அருண் விஜய்க்கு ஆடர் போட்ட கமல்

தற்போது ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இவருடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அதற்கு முதற்கட்டமாக தற்போது பிஜேபி இடம் கை கொடுக்கிறது, அவர்களை சந்திப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். இந்த விஷயங்கள் அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரஜினி செய்யும் விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதாவது அரசியல் இனிமேல் ஒத்து வராது, அதனால் நடிக்கும் வரை நடித்துவிட்டு போயிடலாம் என்று இருந்தார். இதற்கிடையில் இவருக்கு ஏற்கனவே கவர்னர் பதவி கொடுக்கப் போகிறார்கள் என்று பேச்சுக்கள் அடிபட்டது. அப்பொழுது இவர் அரசியலில் இறங்கப் போகிறார் என்ற காரணத்திற்காக வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

Also read: பீஸ்ட், அண்ணாத்த படங்களை அசால்ட்டாக உதறி தள்ளிய ஜெயிலர் பிரபலம்.. கமல் படத்தை தேர்ந்தெடுத்து பண்ண மாஸ் வேலை

ஆனால் தற்போது அரசியல் வேண்டாம் என்று முடிவு எடுத்ததால் நடிக்கும் வரை நடித்துவிட்டு பிஜேபிக்கு ஆதரவாளராக இருந்து அந்த கவர்னர் பதவியை வாங்கி மீதமுள்ள காலத்தை ஓட்டிவிடலாம் என முடிவு செய்திருக்கிறார். இதனால் பிஜேபி ஆட்சி தமிழ்நாட்டில் ஜெயிப்பதற்கு ரஜினி ஆதரவாக இருக்கப் போகிறார்.

அவர்கள் ஜெயித்து விட்டால் கவர்னர் பதவி உறுதியாக கிடைத்து விடும் என்பதற்காக இந்த மாதிரி பிளான் போட்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். ஆனால் இவருடைய படத்திற்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்குமே தவிர இவருடைய அரசியல் திட்டத்திற்கு ஒருபோதும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். அதனால் பிஜேபி ஆட்சியின் ஜம்பம் கண்டிப்பாக இங்க பலிக்க வாய்ப்பில்லை.

Also read: ஆட்டம் கண்ட ஜெயிலர் வசூல்.. 13ஆவது நாள் முடிவில் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Trending News