வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் பாடலுக்கு சிம்பு பாடி, நடித்ததற்கு இதான் காரணமா.? மொத்த கோடம்பாக்கமும் எதிர்பார்க்காத அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்களில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மவுசு கொஞ்சம் அதிகமாக இருக்கும் அதிலும் குறிப்பாக உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் வெளிவரும் போது உண்மையான மிகப்பெரிய கொண்டாட்டமாக ரசிகர்கள் கருதுவார்கள். அப்படி இந்த பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களில் வருகையால் இரு படங்களுக்கான அப்டேட்டுகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் வாரிசு படத்தில் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வேகமாக வெளி வருகின்றன. முதலில் வெளிவந்த ரஞ்சிதமே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்து குழந்தைகள் வரை சென்றடைந்து எப்போதும் போல விஜய் பாடல் அனைவரையும் ஆட வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கும்போது அடுத்த பாடல் வெளியாகி உள்ளது.

Also Read : தனுஷ் பத்திரிக்கையால் சிம்புக்கு வந்த பழி.. பொண்ணு, சினிமா இரண்டையும் விட்டுட்டானே என ஆதங்கத்தில் அடித்த டிஆர்

ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த பாடல் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விஜய்காகவே செதுக்கப்பட்ட பாடலாக இது எழுதப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக சிம்பு இந்த பாடலை பாடியிருக்கிறார். பாட்டு மட்டும் பாடாமல் இந்த பாடலுக்கு நடித்துக் கொடுத்து ஆடியிருக்கிறார். இது அனைத்து ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் கொண்டு சென்றுள்ளது.

தமனும், சிம்புவும் நண்பர்களாக இருப்பதால் தமன் சிம்புவிற்கு போன் செய்து இந்த பாடலை நீங்கள் பாடி கொடுக்க வேண்டும் என்று கேட்க, சிம்பு எந்த ஒரு தயக்கமும் இன்றி உடனே அதற்கென்ன விஜய் அண்ணா படம்தானே பாடுகிறேன் என்று கூறியிருக்கிறார். மூன்று மணி நேரம் பாட வேண்டிய இந்தப் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் முடித்துக் கொடுத்து சென்றுவிட்டார்.

Also Read : 2022-ல் வெளிவந்த உடனே ட்ரெண்டான 10 பாடல்கள்.. விஜய்க்கு டஃப் கொடுத்த சிம்பு

இதே போல் பத்து நாட்கள் கழித்து தமன் சிம்புவுக்கு கால் செய்து நீங்கள் பாடிய பாடலுக்கு நீங்களே நடனமாடி நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்க இதற்கும் எந்த தயக்கமும் காட்டாமல் உடனே சரி நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். எல்லாம் முடிந்து இவருக்கான சம்பளம் எவ்வளவு என்று சிம்புவிடம் படக்குழு கேட்க சம்பளம் ஏதும் வேண்டாம் நட்புக்காக தான் வந்தேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதில் முக்கியமாக சிம்பு எப்போதுமே தன்னை ஒரு அஜித் ரசிகராக காட்டிக் கொள்வார் அதையும் தைரியமாக கூறுவார். எந்த ஒரு தயக்கமும் இன்றி தான் பெரிய நடிகராக இருந்தும் இன்னொரு நடிகரின் படத்தில் இப்படி நடித்து கொடுத்து ஆடுவது என்பது சாதாரண விஷயமல்ல அவர் எதையும் எதிர்பார்க்காமல் பழகின பழக்கத்திற்காக செய்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது சினிமாவில் அவர் கற்றுக்கொண்ட அனுபவத்தை காட்டுகிறது என்று அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

Also Read : 4 வெற்றி இயக்குனர்களை அலைய விடும் சிம்பு.. அடுத்து எஸ்டிஆர் கையில் எடுக்கப் போகும் அவதாரம்

Trending News