வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

பொதுவாகவே சிம்பு தான் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு சர்ச்சையில் முழித்துக் கொண்டிருப்பார். அதனாலே அவர் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும் வெளிவரும் போது பல போராட்டங்களை கடந்து தான் திரையரங்குகளில் பார்க்க முடியும். அந்த அளவிற்கு பிரச்சனைக்கும், சர்ச்சைக்கும் முழு உருவமாக இருக்கக்கூடியவர் தான் சிம்பு. அப்படிப்பட்ட இவர் கூட நடித்த ஒரு நடிகையும் அதே பழக்கம் ஒட்டிக் கொண்டதோ என்னவோ.

சிம்பு படத்தில் ஜோடி சேர்ந்த பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அளவிற்கு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் எதிர்பார்ப்புடன் கூடிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதில் இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமிருந்து நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

Also read: சிம்புவுக்காக மெனக்கெடும் கௌதம் மேனன்.. தயாரிப்பாளர் வெளியிட்ட அடுத்த பட சீக்ரெட்

இதை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு மேலும் நிறைய படங்கள் எடுத்து முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரச்சனை வரும் என்று தெரிந்தே இந்த மாதிரியான ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது இவர் தற்போது நடித்து நேற்று வெளிவந்த படமான தி கேரளா ஸ்டோரி. இப்படத்தை சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் நேற்று கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது.

அந்த அளவுக்கு எப்படிப்பட்ட படம் என்றால் ஒரு தனிப்பட்ட மதத்தை தவறாக காண்பிக்கும் விதமாக இப்படத்தின் கதை ஆனது அமைந்திருக்கிறது. இதனால் இந்த நடிகை எப்படி அந்த மாதிரியான கதையில் நடித்திருக்கிறார் என்று அவர் மீது கேரள ரசிகர்களும், தமிழ்நாட்டு ரசிகர்களும் வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: கடும் எதிர்ப்பு, வெறுப்புணர்வை தூண்டிய தி கேரளா ஸ்டோரி.. படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இப்படம் இந்தியாவை எதிர்க்கும் விதமாக எப்படி நடிக்கலாம். உங்களுக்கு முஸ்லிம் நண்பர்களை இல்லையா. பணத்துக்காக என்ன வேணாலும் செய்வீர்களா என கடுமையான விமர்சனங்களுடன் கேட்டு வருகிறார்கள். அதிலும் இப்பதான் கொஞ்சம் நடிகை என்று ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கிறாய். அதற்குள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக நடித்தது சரியா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதற்கு இந்த கதாநாயகி அசால்டாக ஒரு பதில் அளித்திருக்கிறார். அதாவது இந்த படத்தில் ஒரு நல்ல கருத்து இருந்தது அதற்காகத்தான் நான் நடித்தேன். மற்றபடி இதில் மதவெறி எதுவும் இல்லை. எனக்கு அப்படி நடிப்பதற்கும் அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் தற்போது ரசிகர்கள் பெரும் ஆக்ரோஷத்தில் இருப்பதால் இனிமேல் கேரளா மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாது. மீறி இந்த கதாநாயகி நடித்தால் அந்தப் படம் வெளியிடும் திரையரங்கை சூறையாடி விடுவோம். அத்துடன் உன் படத்தை யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டோம் என்று கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.

Also read: கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

Trending News