வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

600 கோடி வசூல் ஆனா, சம்பளமே தரல.. லியோ இயக்குனருக்கே இந்த நிலைமையா!.

Leo Director: தளபதி விஜய்யின் படம் என்றாலே நிறைய பிரச்சனைகள் வருவது சகஜம் தான். ஆனால் லியோ படத்திற்கு கொஞ்ச நஞ்ச பிரச்சனை இல்லை, நாலா பக்கமும் ஏகப்பட்ட பிராப்ளம் வந்தது. அதையெல்லாம் சமாளித்து தான் கல்லா கட்டினார்கள். 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே லோகேஷ்- விஜய் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இரண்டாம் பாதி லோகேஷின் அசிஸ்டன்ட் டைரக்டர் ரத்னகுமார் தான் எடுத்து சொதப்பி வைத்தார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இவர் மட்டுமல்ல இந்த படத்தில் இன்னும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் சுத்தமாகவே சம்பளம் தரவில்லையாம். ஏற்கனவே ‘நா ரெடி’ பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று பெரும் சர்ச்சை வெடித்தது. ஆனால் லியோ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 600 கோடி வசூலை வாரி குவித்ததாக சொல்கிறார்கள்.

Also Read: விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதி செய்யும் காரியம்.. புது மாப்பிள்ளையாக ஜொலிக்கும் பெருமாள் வாத்தியார்

சம்பளமே கொடுக்காமல் டேக்கா கொடுத்த தயாரிப்பாளர்

ஆனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இந்த படத்தால் எந்த லாபமும் இல்லை, நஷ்டம் தான் ஏற்பட்டது என்று திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரே சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். ஆனால் இப்போது லியோ படத்தில் பணிப்புரிந்த லோகேஷின் அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு, படத்தின் தயாரிப்பாளரான லலித் சம்பளமே கொடுக்காமல் டேக்கா கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் பணத்திற்காக ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். இந்த படம் முழுக்க நிறைய பிரச்சனைகள் இருந்தது. இதனால் தளபதி விஜய்க்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது.

Also Read: தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்

Trending News