வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெற்றிமாறனுக்கு இந்த நிலைமையா?. படாதபாடு படுத்தி சுற்றலில் விட்ட ராகவா லாரன்ஸ்

தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுத்த வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறனை பாடாய்படுத்தி சுற்றலில் விட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்போது இவர் படு பிஸியாக உள்ளார். அவரின் கைவசம் ஏழு எட்டு படங்களை வைத்துள்ளார்.

Also Read : போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பது ஏன்?. உண்மையை கூறிய வெற்றிமாறன்

அதுமட்டுமின்றி ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக லாரன்ஸ் நடித்து வருகிறார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் லாரன்ஸ் படம் பண்ணுவதாக இருந்தது. இதற்காக இரண்டு மூன்று கதைகளை வெற்றிமாறன் லாரன்ஸிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதில் ஒரு கதை கூட லாரன்ஸுக்கு பிடிக்கவில்லையாம். ஆகையால் வேறு நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என வெற்றிமாறனை பாடாய்ப் படுத்தி வருகிறாராம். மேலும் தொடர்ந்து இழுத்தடித்து வந்த லாரன்ஸ் ஒரு கட்டத்திற்கு எதிர்பார்த்த கதை அமையாததால் இந்த ப்ராஜெக்ட் டிராப் செய்து விட்டாராம்.

Also Read : லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

ஒரு முன்னணி இயக்குனருக்கு இந்த நிலைமையா என இந்த விஷயம் தெரிந்தவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் லாரன்ஸ் கையில் நிறைய படங்கள் வைத்துள்ளதால் இவ்வாறு வெற்றிமாறனை இழுத்து அடிக்கிறார் என்ற ஒரு பேச்சும் நிலவி வருகிறது.

இல்லையென்றால் கமர்சியல் கதையை எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் வெற்றிமாறன் எப்போதுமே தனது படங்களில் மக்களுக்கு ஒரு கருத்து சொல்லும் படியாகவும், அவர்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக தான் தொடர்ந்த படங்களை எடுத்த வருகிறார்.

Also Read : கையெடுத்து கும்பிடும் ராகவா லாரன்ஸ்.. பெட்டி பெட்டியாக கல்லா கட்டியதால் வைக்கும் வேண்டுகோள்

Trending News