வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் 40% சொத்து, மருமகள்கள் கையில் தான் இருக்கு என நினைத்து அவர்கள் என்ன பண்ணினாலும் பரவாயில்லை என்று சூடு சொரணை இல்லாமல் குணசேகரன் அமைதியாக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் ஆடிட்டர் இவரை தனியாக வரவைத்து அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியாத மாதிரி குணசேகரனை குழப்பி விடுகிறார்.

ஆனாலும் உங்க வீட்டு மருமகள்கள் பெயரில் இருக்கும் கம்பெனிகள் அனைத்தையும் உடனடியாக மாற்றி விடுங்கள் என்று கூறுகிறார். இல்லையென்றால் இதுவும் கைவிட்டு போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிச்சுகிட்டு இருக்கிற நிலையில் ஆடிட்டர் இதையெல்லாம் சொல்லி இன்னும் அவரை டம்மியாக்க நினைக்கிறார்.

Also read: குணசேகரனின் அஸ்திவாரத்தை உடைக்கும் சில்வண்டு.. பெண்களின் அடிமைத்தனத்தை தோலுரிக்கும் எதிர்நீச்சல்

இதற்கிடையில் அப்பத்தாவின் கைரேகையை வாங்கிய ஜீவானந்தம், அந்த சொத்து சட்டப்படி இன்னும் இரண்டு நாட்களில் நாம் நினைத்தபடி வந்து விடும் என்று இருக்கிறார். மேலும் இந்த விஷயத்தை கௌதம் இடம் ஒப்படைத்து இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற முதல் ப்ராஜெக்ட் இதை சரியாக செய்யுங்கள் என்று கூறுகிறார்.

இப்பொழுது இவர் ஜனனிக்காக தோள் கொடுக்கப் போறாரா அல்லது லட்சியத்துக்காக ஜீவானந்தம் சொன்னபடி காரியத்தை செய்யப் போகிறாரா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. அடுத்ததாக ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டிற்கு வந்து அநாகரிகமான வார்த்தையால் அனைவரையும் தாக்கி பேசுகிறார். அடுத்து ஆதிரையை தர தரவென்று இழுத்து வருகிறார்.

Also read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

அப்பொழுது அங்கிருந்த குணசேகரனின் மகள் ஆவேசமாக பேசி இங்கிருந்து கிளம்புறீங்களா இல்லையென்றால் நான் போலீசுக்கு போன் பண்ணி வர சொல்லவா என்று மிரட்டுகிறார். உடனே கரிகாலன், அம்மா நீ இங்கே இருந்து கிளம்பிடு இவங்க எல்லாம் சொல்றதை செஞ்சிருவாங்க. குணசேகரன் மாமா மாதிரி வாயாலேயே வடை சுடுறவங்க கிடையாது என்று சொல்கிறார்.

பிறகு ஜான்சி ராணி குணசேகரன் வீட்டில் இருந்து துண்டக் காணும் துணிய காணோம்னு என்று ஓடி விடுகிறார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் குணசேகரன் மானம், மரியாதை இல்லாமல் தான் அழைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வெறும் பேச்சு வார்த்தையோடு இல்லாமல் அவர்கள் சாதிக்க நினைத்ததை சாதித்துக் காட்டி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் வசமாக மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா.. வேலைக்கு ஆப்பு வைத்த மேனேஜர்

Trending News