புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரகசியத்தை மறைத்து தெளிவாக காய் நகர்த்தும் இசைவாணி.. முன்னாள் கணவருடன் திருமணக்கோலத்தில் வெளிவந்த புகைப்படம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களை மிகவும் உருக்கமாக விவரிக்கிறார்கள்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் கானா பாடகி இசைவாணி. சென்னை ராயபுரத்தை சேர்ந்த இவர் கானா பாடல்களின் மூலம் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி கூறிய இவர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்ததாகவும், தங்குவதற்கு கூட நல்ல வீடு இல்லாமல், நல்ல உணவு இல்லாமல் வாழ்ந்ததாக  கண்ணீருடன் போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.

நடிகை பவானி ரெட்டி, இசை வாணியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி கூறினார். அதைக்கேட்ட இசைவாணி அவரை தேற்றும் விதமாக தன்னுடை ய  திருமண முறிவை பற்றி அவரிடம் ரகசியமாக கூறினார்.

இந்த விஷயத்தை தன்னைப்பற்றி போட்டியாளர்களுக்கு கூறியபொழுது இசைவாணி மறைத்து விட்டார். இதை வைத்து பார்க்கும்போது தனது திருமண வாழ்க்கையை பற்றி பிக்பாஸில் பேசுவதற்கு அவர் தயாரில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பவானி ரெட்டி எப்படி சிம்பதியாக  பேசுகிறாரோ அதுபோன்ற செயலில் இசைவாணி செய்யவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

isaivani-bigg-boss
isaivani-bigg-boss

தற்பொழுது இவருடைய திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளிவந்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

isaivani-bigg-boss
isaivani-bigg-boss

Trending News