Actor Simbu: சிம்புவுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு அதன் தொடர்ச்சியாக பத்து தல எனத் தொடர்ந்து 3 படங்கள் நல்லதொரு கம்பேக்கை கொடுத்தது. ஆனால் இப்போது முடிந்தது என பார்த்த பிரச்சினை ஒன்று மறுபடியும் தலைவிரித்து ஆடுகிறது.
சிம்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இதற்காக இந்த படத்திற்கான முழு ஏற்பாடுகளும் செய்த பின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
Also Read: அண்ணன்னு சொல்லி, ஐசரி கணேஷ் அடிச்ச அந்தர் பல்டி.. உலக நாயகனால் தலை தப்பிய சிம்பு
ஆனால் சிம்பு மாநாடு படத்திற்குப் பின்பும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதன்பின் ஐசரி கணேசன் சிம்புவை அடுத்த படத்தில் நடிக்க விடவே மாட்டேன் என பெரிய பிரச்சனையைக் கிளப்பினார். இருப்பினும் சிம்பு அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டானார்.
ஐசரி கணேசனுக்கு கமல் அண்ணன் மாதிரி அப்படி இருக்கும்போது அவர் தயாரிக்கும் படத்தில் பிரச்சனை பண்ண போவதில்லை என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். இதனால் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால் அது இன்னும் முடியவில்லை, தோண்ட தோண்ட கிளம்பி கொண்டிருக்கிறது.
Also Read: 4 வாரிசு நடிகர்களை டார்கெட் செய்யும் கமல்.. ராஜ் கமல் ஃபிலிம்ஸ்-க்கு வந்த பெரிய இடத்து தூது
வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு ‘கொரோனா குமார்’ படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக இப்போது ஐசரி கணேசன் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இதனால் இந்த பிரச்சனை, பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
இந்த பிரச்சனை முடிந்து விட்டது கமல் படத்திற்கு பிறகு சிம்பு நிச்சயம் தன்னுடைய படத்தில் நடிப்பார் என்று சமீபத்திய பேட்டியில் ஐசரி கணேஷ் வெளிப்படையாக பேசி பச்சைக்கொடி காட்டினார். ஆனால் இப்பொழுது ஐசரி கணேஷ் சிம்பு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் தான் அவரை விடுவோம் என்று நீதிமன்றம் சென்று விட்டார். சிம்பு தரப்பும் நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சந்திக்கலாம் என விடாப்பிடியாய் நிற்கிறது.