சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அதிரடி ஆட்டத்தால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இஷான் கிஷன்.. விராட் கோலியை மிஞ்சிடுவார் போல!

இந்தியா முழுவதும் இன்று முதல் மாநில கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி தொடரானது தொடங்கியது. இந்த போட்டியில் பல மாநில கிரிக்கெட் அணிகளும் கலந்து கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தூரில் நடைபெற்ற மாநில கிரிக்கெட் அணி போட்டியில் மத்தியபிரதேச அணி மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின.

ishan kishan
ishan kishan

டாஸ் வென்ற மத்தியபிரதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது பின்பு ஏன்டா தேர்வு செய்தோம் என்ற அளவிற்கு ஜார்கண்ட் அணி மத்தியபிரதேச அணிக்கு பாடம் புகட்டியது.

ஜார்கண்ட் அணியின் கேப்டனான விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் முதலில் களமிறங்கி தனது அணியின் வெற்றிக்குவித்திட்டார். இஷான் கிஷன் உடன் இணைந்து களத்தில் இறங்கிய உட்கார் சிங் 6 ரன்களில் வெளியேற அடுத்ததாக குமார் குஸ்கா களமிறங்கி 45 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்த அடுத்ததாக களமிறங்கிய விராட் சிங் 49 பந்துகளில் 68 ரன்களும், ஸ்மித் குமார் 58 பந்துகளில் 52 ரன்களும், அங்குள் ராய் 39 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 72 ரன்களை குவித்தார்.

ஆனால் ஜார்கண்ட் அணியின் கேப்டனான இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 11 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் மொத்தம் 94 பந்துகளில் 178 ரன்கள் குவித்தார். அபாரமாக விளையாடிய அங்குள் ராய் மற்றும் இஷான் கிஷன் மற்ற வீரருடன் சேர்த்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்துள்ளனர்.

Trending News