வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பமாக சுவாரசியத்துடன் கதை நகர்ந்து வருகிறது. இத்தனை நாளா வேறு வழியில்லாமல் குணசேகரனிடம் அண்டி பிழைத்த ஆதிரை தற்போது அவருடைய வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறக்கும் வழியில் சாருபாலா வீட்டிற்கு போய்விட்டார். அங்கே போனதும் குணசேகரன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றும் விதமாக முகத்திரையை நாறு நாராக கிழித்து தொங்க விட்டுவிட்டார்.

அதாவது அருணை ஆக்சிடென்ட் பண்ணி இந்த நிலைமைக்கு ஆக்கியது எங்க அண்ணன் குணசேகரன் தான். அது மட்டுமில்லாமல் அப்பத்தாவின் இறப்பிற்கும் இவர்தான் முழு காரணம் என்கிற உண்மையை அனைவரது முன்னிலையிலும் போட்டு உடைத்து விட்டார். இதற்கு வக்காலத்து வாங்கி வந்த கரிகாலனையும் கிழித்து தொங்க விட்டுவிட்டார்.

இந்நிலையில் கொஞ்சம் கூட எதிர்பாராத விதமாக சாறுபாலா, ஆதிரைக்கும் அருணுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார். பின்பு ஞானம், ஆதிரையே தரதரவென்று இழுத்து வெளியே வருகிறார். அந்த நேரத்தில் போலீசார் வருகிறார்கள். அப்பொழுது ஆதிரை எனக்கு இந்த கும்பலுடன் போக விருப்பமில்லை.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சன் டிவியை முந்த முடியாமல் தோற்றுப்போன சேனல்

நான் இங்கு தான் இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும் போலீசார் எதுவும் சொல்ல முடியாமல் குணசேகரன் மற்றும் தம்பிகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். வீர வசனம் பேசிக் கொண்டு எஸ்கேஆர் வீட்டிற்குள் புகுந்த குணசேகரன் கடைசியில் அவமானப்பட்டு மூஞ்சி தொங்கிக்கொண்டு போனதுதான் மிச்சம். அங்கே போனதும் கரிகாலன் ஜான்சி ராணி என்னமோ மான மரியாதை இழந்தது போல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.

இதில் ஆதிரை சொல்லியது படி இவர்கள் இருவருக்குமே சொத்து தான் முக்கியம். அதற்காக தான் ஆதிரை பின்னாடி அலைந்தார்கள். இப்பொழுது ஆதிரையும் இல்லை, சொத்தும் இல்லை என்று தெரிந்ததும் சாகப் போற மாதிரி சீன் போட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்த குணசேகரன் உங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறுகிறார்.

அந்த வகையில் குணசேகரன் அவருடைய பொண்ணு தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இனிமேலும் சும்மா இருக்க மாட்டார். ஏற்கனவே குணசேகரனை எதிர்த்து சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தன் பொண்ணுக்கு ஒரு அநியாயம் நடக்கும் என்றால் கண்டிப்பாக எதிர்நீச்சல் போட்டாவது குணசேகரனை தோற்கடித்துக் காட்டுவார்.

Also read: டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி

Trending News