ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கோபியை நடுத்தெருவில் நிற்கவைக்க போகும் ஈஸ்வரி.. பாக்கியா ராதிகா இருவரும் சேர்ந்து வைக்கும் ஆப்பு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வித்தியாசமான கதைகள் அடுத்தடுத்த களம் என்று எதுவும் இல்லாமல் அரைத்த மாவையே தொடர்ந்து பல மாதங்களாக பாக்கியலட்சுமி சீரியல் அரைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற வாரங்களில் மறுபடியும் முதலில் இருந்தா என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி அரங்கேற்றத்தை ஆரம்பித்து விட்டார்.

அதாவது பாக்கியா புதுசாக எடுத்திருக்கும் ஆர்டரில் ஐடியாக்கள் கொடுப்பதும் உதவி பண்ணுவதுமாக கோபி மூக்கை நுழைத்து வருகிறார். ஆனாலும் இதை தடுக்கும் விதமாக பாக்யா, எதுவும் சொல்லாமல் கோபி சொன்னபடி எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் பாக்கியா எடுத்திருக்கும் ஆர்டரில் சமைப்பதற்கு கோபியும் உதவி பண்ணி சமைக்க ஆரம்பிக்கிறார்.

அப்பொழுது இவர்கள் இருவருமே அங்கே பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த ஈஸ்வரி இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதனால் எப்படியாவது கோபியின் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக ராதிகாவை பிரித்துக் காட்ட வேண்டும் என்று ஈஸ்வரி பல தில்லாலங்கடி வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்,

அந்த வகையில் ராதிகாவிடம் கோபியும் பாக்யாவும் ஒன்று சேர ஆசைப்படுகிறார்கள். தயவு செய்து நீ கோபி வாழ்க்கையை விட்டு விலகிவிடு என்று ராதிகாவை டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே ராதிகாவிற்கும் தனிமையாக இருப்பது போலவும், கோபி எந்நேரமும் பாக்யாவை பற்றி புலம்பி தவிக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டு ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் கோபி, இனியா செழியன் என்று பிள்ளைகள் மீது அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். மயூவை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தமும் ராதிகாவிடம் இருக்கிறது. அதிலும் இந்த ஈஸ்வரி கிடைக்கிற கேப்பில் எல்லாம் ராதிகாவையும் மயுவையும் கஷ்டப்படுத்தும் விதமாக பேசுவதால் ராதிகா அதிரடியாக கோபி விட்டு விலகலாம் என்று முடிவு எடுக்கப் போகிறார்.

ஆனால் கோபி மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றாலும் ஈஸ்வரி, கோபி மனதில் கலைக்கும் விதமாக ஏதாவது சொல்லி கோபி மனசை மாற்றி விட வாய்ப்பு இருக்கிறது. பிறகு ராதிகா போன பிறகு கோபி தனிமரமாக நிற்கும் நேரத்தில் பாக்யாவுடன் சேர்த்து வைக்கலாம் என்று ஈஸ்வரி அடுத்த பிளான் பண்ணுவார். ஆனால் பாக்கிய, யார் என்ன சொன்னாலும் நான் கோபியுடன் சேர மாட்டேன் என்ற நினைப்பில் பிடிவாதமாக இருக்கிறார்.

அந்த வகையில் ஈஸ்வரி மற்றும் கோபி என்னதான் பிளான் பண்ணினாலும் பாக்கியம் ஒன்று சேர மாட்டார். இதனால் ராதிகாவும் இல்லாமல் பாக்யாவும் இல்லாமல் கோபி நடுத்தெருவில் தான் நிற்கப் போகிறார். இதுதான் கோபி மற்றும் ஈஸ்வரி செய்த வேலைக்கு சரியான பதிலடியாக இருக்கப் போகிறது.

Trending News