ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பல வருடங்களுக்குப் பின் எக்ஸ் காதலனை சந்தித்த ஈஸ்வரி.. அதிர்ச்சியில் குணசேகரனுக்கு வந்த நெஞ்சு வலி

Ethirneechal Serial: தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல். இந்த சீரியல் அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு நாடகமாக ரசிகர்களின் மனதில் ஒய்யாரத்தில் இருக்கிறது. இதில் நடிக்கக்கூடிய ஒவ்வொரு கேரக்டரும் மக்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது ஜீவானந்தம் ஈஸ்வரியின் எக்ஸ் லவ்வரா என்ற கேள்விதான் பலர் மனதிற்குள் சந்தேகத்தை எழுப்பி வருகிறது. ஆனால் அது 100% உண்மைதான். ஜீவானந்தமும் ஈஸ்வரியும் இரு தினங்களுக்கு முன் பேசிய காணொளியில் அதை உணர முடிந்தது. இதனை தொடர்ந்து எப்படியாவது சொத்து விஷயமாக ஜீவானந்தத்தை பார்த்து பேச வேண்டும் என்று ஈஸ்வரி கேட்டிருந்தார்.

Also read: தூங்கு மூஞ்சி அருணை நினைத்து புது மாப்பிள்ளையே வெறுக்கும் ஆதிரை.. எக்ஸ் காதலியே பார்க்க மறுத்த ஜீவானந்தம்

ஆனால் அதற்கு பார்க்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இந்த நிலையில் தற்போது ஜீவானந்தம், பர்கானா, ஈஸ்வரி மற்றும் இவருடைய அப்பா அனைவரும் ஒன்றாக சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி  வருகிறது. அந்த வகையில் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை நேரில் பார்க்கும், ஈஸ்வரிக்கு பல ஞாபகங்கள் வெளிவரும்.

மேலும் ஜீவானந்தத்திற்கு, ஈஸ்வரி முன்னாள் காதலி என்று ஏற்கனவே தெரியும். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்த்ததும் பழைய பிளாஷ்பேக் காட்சிகள் வர இருக்கிறது. அதாவது ஈஸ்வரி காலேஜில் படிக்கும் போது அதே கல்லூரி மாணவனாக ஜீவானந்தம் அப்பொழுதே சமூக ஆர்வலராக இருந்திருக்கிறார்.

Also read: மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த சமயத்தில் ஈஸ்வரி அப்பாவிடம் பேசிய பொழுது அவர் ஜீவானந்தத்தை திட்டி விட்டு அனுப்பி இருக்கிறார் . இது ஒரு குறும்படமாக கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்தபடியாக ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்று தெரிந்தால் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்தது போல் மறுபடியும் பிளான் போடலாம். இதை வைத்துக் கூட அவர் நினைத்த காரியத்தை சாதிக்க டீல் பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் சந்திப்பில் பல ட்விஸ்ட்டுகள் விறுவிறுப்பாக வர இருக்கிறது. ஜீவானந்தம் யார் இப்படிப்பட்டவர் என்கிற உண்மையை இப்பொழுதாவது ஈஸ்வரி தெரிந்து கொள்வாரா? இதனை தொடர்ந்து இவருக்கு பின்னணியில் இருந்து அனைத்தையும் உதவியது அப்பத்தா தான் என்பதை சொல்லும் நேரம் வந்துவிட்டது. இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்யமான விஷயங்கள் வர இருக்கிறது.

ஜீவானந்தம் ஈஸ்வரி சந்திக்கும் படப்பிடிப்பு

easwari-jeevanadham
easwari-jeevanadham

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Trending News