சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோபி கிட்ட ராதிகாவை நெருங்க விடாமல் தடுக்கும் ஈஸ்வரி.. மாமியாருக்காக முன்னாள் புருஷனை கவனிக்கும் பாக்யா

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால் பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள். உடனே கோபிக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ண வேண்டும் என்பதால் செழியன் கையெழுத்து போட்டு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து விட்டது.

ஆனாலும் ராதிகாவுக்கு தற்போது வரை எந்த விஷயமும் தெரியாமல் இருப்பதால் கோபியை நாளா பக்கமும் தேடி அலைகிறார். அடுத்ததாக செழியன் மற்றும் எழில், ஆஸ்பத்திரியில் கோபியை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இனியா, ஈஸ்வரி மற்றும் பாக்கியா அனைவரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்து போகலாம் என்று வந்து விடுகிறார்கள்.

அப்படி வந்த பொழுது செல்வி இடம் நடந்த விஷயத்தை பாக்யா சொல்கிறார். உடனே உனக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் அவருக்கு ஒரு பிரச்சனை என்றதும் உனக்கு மனசு துடித்து விட்டதா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா, அந்த நேரத்தில் போன் பண்ணி எனக்கு உதவி பண்ணு என்று கேட்கும் பொழுது என்னால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. மனிதாபிமான முறையில் அவருக்கு உதவி பண்ணினேன் என்று கூறுகிறார்.

இதை கேட்டதும் செல்வி, அப்படி என்றால் அவர் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கிய விடுவியா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா இது வேற அது வேற, நான் எந்த காரணத்தை கொண்டும் அவர் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க மாட்டேன் என்று தீர்மானமாக சொல்கிறார். அதற்கு செல்வி, அப்படி என்றால் ஹாஸ்பிடலில் இருந்து வந்தவுடன் கோபி சாரை ஜெயிலுக்கு அனுப்ப முடியுமா உன்னால என்று கேட்கிறார்.

இப்பொழுது இதைப் பற்றி பேச வேண்டாம், நீ வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு போ நாங்க ஹாஸ்பிடலுக்கு போகிறோம் என்று ஈஸ்வரி கூட்டிட்டு மறுபடியும் பாக்கியா ஹாஸ்பிடல் வந்து விடுகிறார். இருந்தாலும் இந்த விஷயத்தை ராதிகா விடம் சொல்ல வேண்டும் என்று ராதிகா வீட்டிற்கு போகிறார். ஆனால் ராதிகா வீடு பூட்டி இருப்பதால் அங்கு நின்று கொண்டு போன் பண்ணி பார்க்கிறார்.

ஃபோனும் போகாததால் ஈஸ்வரியை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் விடுகிறார். பிறகு கோபிக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அபாய கட்டத்திலிருந்து தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் சொன்னதும் அனைவரும் பெருமூச்சு விட்டு நிம்மதியாகி விட்டார்கள். உடனே பாக்கியா மறுபடியும் ராதிகாவிற்கு போன் பண்ணி பார்க்கிறார். ராதிகா போன் எடுத்ததும் ஆஸ்பத்திரிக்கு வாங்க என்று மட்டும் சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார்.

பிறகு பதட்டத்துடன் வந்த ராதிகா, பாக்யாவை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு கோபிக்கு நேற்று இரவு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. நாங்க எல்லாரும் சேர்ந்து ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்து விட்டோம். ஆப்ரேஷனும் நல்லபடியாக முடிந்து விட்டது இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று ராதிகாவிடம் பாக்யா சொல்கிறார்.

உடனே கோபியை நான் பார்க்கணும் என்று ராதிகா போகிறார். ஆனால் கோபியை ராதிகா பார்க்க கூடாது என்று ஈஸ்வரி தடுக்கிறார். உன்னால தான் என் பிள்ளைக்கு இந்த நிலைமை. நீ வந்த பிறகுதான் இரண்டு தடவை உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் வந்து இந்த மாதிரி இருக்கிறான். நீ அவனை பார்க்க கூடாது என்று ராதிகாவை தடுத்து விடுகிறார்.

அடுத்து கோபிக்கு தேவையான மருந்து செலவுகளை வாங்கிட்டு வரச் சொல்லி ராதிகாவிடம் கொடுக்கும் பொழுது அங்கே இருக்கும் நர்ஸ் பாக்கியா தான் அவங்க மனைவி. அவங்களிடம் கொடுங்கள் என்று சொல்லிய நிலையில் ராதிகா முகம் அப்படியே வாடி போய்விட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரி சொன்ன காரணத்திற்காக பாக்கியா அவருடைய முன்னாள் கணவரை கவனிக்கும் பொறுப்பை ஏற்க போகிறார்.

Trending News