சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரகசியமாக எக்ஸ் காதலனை சந்திக்கும் ஈஸ்வரி.. புருசனை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட நந்தினி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீனும் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம் தன்னுடைய காதலன் என்றும் அவரை நான் சமீபத்தில் சந்தித்தேன் என்ற உண்மையை ஈஸ்வரி இத்தனை நாளாக மறைத்து வைத்திருந்தார். ஆனால் அதை தற்போது ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி இடம் சொல்லி, கல்லூரி நாட்களில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டார்.

அத்துடன் ஜீவானந்தம் உண்மையில் நல்லவர்தான். நாளைக்கு அவர் வீட்டில் இருக்கும் அப்பத்தாவை சந்தித்து அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். இதனை தொடர்ந்து அப்பத்தாவிற்கு இனி நாம் அனைவரும் முழு சப்போர்ட்டை கொடுக்க வேண்டும். குணசேகரன் இடமிருந்து அப்பத்தாவையும், 40% சொத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று ஈஸ்வரி கூறுகிறார்.

Also read: பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

அதனால் நாளை நாம் ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவோம் என்று கூறியிருக்கிறார். அடுத்தபடியாக ஜனனியும், ஈஸ்வரியும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்கு தயாராகி வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கதிர், நந்தினியிடம் காபி கொண்டுட்டு வா என்று கேட்க, அதற்கு நான் ஏன் போட்டுத் தரணும். உங்க அண்ணனிடம் போய் கேளுங்க என்று சொல்கிறார். அத்துடன் என்னை கழுத்தை நெரித்து கொன்றுக்க வேண்டியது தானே என்று உங்க அண்ணனிடம் சொன்னீங்க.

இப்ப மட்டும் ஏன் என்கிட்ட வந்து கேட்கிறீங்க அதெல்லாம் நான் ஒன்னும் பண்ண முடியாது என்று தைரியமாக பேசி டார் டாராக கிழித்து தொங்க விடுகிறார். உடனே கதிர் நீ இங்கே இருக்க வேண்டாம் உன் அப்பா வீட்டுக்கு போ என்று கூற, அதெல்லாம் என்னால போக முடியாது உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது என்று கூறி கதிர் செய்த அநியாயத்தை சொல்ல வருகிறார். அப்போது இவரை ரேணுகா தடுத்து விடுகிறார்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

இதை கீழே இருந்து கவனித்துக் கொண்டிருந்த குணசேகருக்கு தற்போது ஒரு விஷயம் கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பித்து விட்டது. அதாவது கதிர், ஜீவானந்தத்தின் மனைவியே சுட்டது இவர்களுக்கு தெரிந்து விட்டது போல் குணசேகரன் உணர்ந்து விட்டான். அத்துடன் கதிருக்கு எதிரான எல்லா விஷயங்களையும் சேகரிப்பதற்காக ஜனனி போராடுகிறார். அதன் பின் அவர் செய்த பாவத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் அவர் வெளியில் இருந்தால் ஜீவானந்தம் கண்டிப்பாக அவரை விட்டு வைக்க மாட்டார். உயிர்க்கு ஆபத்து வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கு என்று கதிருக்கு ஆகவும் யோசிக்கிறார் ஜனனி. இதனை அடுத்து ஜீவானந்தத்தை சந்திக்க போகிறார்கள். இனி அங்கே என்ன ட்விஸ்ட்கள் நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Trending News