புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராதிகாவை துரத்தி விட்டு கோபியை பாக்கியாவுடன் கோர்த்து விட சதி செய்யும் ஈஸ்வரி.. செல்வி கொடுத்த டுவிஸ்ட்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்யா வீட்டிற்கு திரும்ப வந்தது ஜெனி மற்றும் செல்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் இந்த ஈஸ்வரி மகனிடம் ஓவராக கரிசனம் காட்டுவதை ஜெனி பார்த்து எரிச்சல் படுகிறார். மேலும் ஈஸ்வரி, நாடகமாடி மறுபடியும் கோபியை பாக்கியவுடன் சேர்த்து வைக்க சதி செய்கிறார் என்று செல்வி புரிந்து கொண்டார்.

இதை பாக்கியவிடம் சொல்லும் விதமாக உன் மாமியார் ராதிகாவை துரத்திவிட்டு கோபியை உன்னுடன் கோர்த்து விடுவதற்கு சதி பண்ணுவது போல் தெரிகிறது. ஒருவேளை உன் மாமியார் நீ கோபி கூட தான் சேர்ந்து வாழணும் சொல்லிட்டா என்னக்கா பண்ணுவ என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா, அவர் என்னை விட்டு போன பிறகு தான் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

மறுபடியும் அவர் என்னுடைய வாழ்க்கையில் வருவதற்கு நான் எந்த காலத்திலும் சம்மதிக்க மாட்டேன். என் மாமியார் இதில் தேவையில்லாத வேலையை பார்த்து வைத்தால் நீங்களும் வேண்டாம், உங்கள் குடும்பமும் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு இங்கிருந்து போய் விடுவேன் என்று ஆக்ரோஷமாக பேசி விட்டார்.

ஆனால் ஈஸ்வரியின் சதி என்னவென்று யாருக்குப் புரியுதோ இல்லையோ செல்விக்கு நல்லா புரிந்து விட்டது, அதை பாக்யாவிடம் சொல்லி உஷார் படுத்தும் விதமாக செல்வி நல்ல காரியத்தை பண்ணி விட்டார். இதனை தொடர்ந்து கோபியை ஈஸ்வரி தாங்கு தாங்கு என்று தாங்கி சாப்பாடு ஊட்டுவது பணிவிடை பண்ணுவது என்று ரொம்பவே ஓவராக பார்த்து வருகிறார்.

அத்துடன் கிடைக்கிற கேப்பிடல் எல்லாம் ராதிகாவை மட்டமாக பேசி ராதிகா சரியில்லை என்பதற்கு ஏற்ப கோபியின் மனதில் விஷத்தை புகுத்துகிறார். கோபியும் அதற்கு மறுப்பு சொல்லாமல் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். இது எதுவும் தெரியாத ராதிகா, கோபி போன் பண்ணுவார் என்று ஃபோனே பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ராதிகாவின் அம்மா, அவர் அவங்க அம்மா வீட்டுல சந்தோஷமா இருக்காரு, நீ கோபியை நினைச்சுட்டு சாப்பிடாம பீல் பண்ணிட்டே இரு என்று திட்டி ராதிகாவை கோபியுடன் சேர்ந்து வாழ சொல்லி அறிவுரை கொடுக்கிறார். ஆனால் ஈஸ்வரி, கோபி வாழ்க்கையில் இருந்து ராதிகாவை விரட்டிவிட்டு பாக்கியவுடன் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறார். பாவம் இதற்கு இடையில் பாக்கியதான் முழித்துக் கொண்டு தவிக்கிறார்.

- Advertisement -

Trending News