சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கோபி போட்ட டிராமாவுக்கு ஈஸ்வரி எடுத்த முடிவு.. ராதிகாவை வைத்து முன்னாள் கணவருக்கு பாக்கியா வைத்த செக்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி சம்பந்தமே இல்லாமல் பாக்கியா வீட்டிற்கு வந்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து ஜாலியாக இருக்கிறார். இதனை பார்த்து கடுப்பான பாக்யா, உங்களுக்கு சம்பந்தமே இல்லாத என் வீட்டில் எப்படி உங்களால இப்படி ஜாலியாக இருக்க முடிகிறது. உங்களை நம்பி வந்த மனைவியை பற்றி கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா?

உங்களை பார்க்கணும் என்பதற்காக இந்த வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும் அலைந்து வருகிறார்கள். அப்படியே வந்தாலும் இந்த வீட்டில் இருப்பவர்கள் அவர்களை அவமானப்படுத்தும் அளவிற்கு பேசுகிறார்கள். இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருப்பது உங்களுக்கு வெட்கமா இல்லையா? எப்படி உங்களுக்கு இந்த வீட்டில் இருக்க முடிகிறது என்று நாலு கேள்வி நாக்க புடுங்குற மாதிரி கேட்டு விட்டார்.

ஆனாலும் இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப கோபி இதை அசால்ட் ஆக எடுத்துக் கொண்டார். அத்துடன் இனியா மற்றும் அம்மா தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் ஓவராகத்தான் ஆடிக் கொண்டு வருகிறார். இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொறுமையாக இருந்து பார்த்த பாக்க பொங்கி எழுந்து விட்டார்.

உங்களுக்கு ஒரு வாரம் தான டைம் கொடுத்தேன், இன்னும் ஏன் இந்த வீட்டை விட்டு போகாமல் இங்கே இருக்கீங்க என்று அனைவரது முன்னாடியும் பாக்கியா, கோபியை பார்த்து கேள்வி கேட்டு விட்டார். உடனே கோபி, பாக்யா சொல்வதும் சரிதான் நான் இங்கிருந்து கிளம்பி விடுகிறேன் என்று ஈஸ்வரிடம் செண்டிமெண்டாக பேசி கிளம்புகிறார்.

ஆனாலும் கோபியை பொறுத்தவரை பாக்யாவை விட்டு போக கூடாது என்ற எண்ணம் வந்துவிட்டது. அத்துடன் இதே வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஒரு டிராமாவை போட ஆரம்பித்து விட்டார். அந்த டிராமா படி மறுபடியும் நெஞ்ச பிடித்துக் கொண்டு வலி வந்தது போல் நடித்து விட்டார். கோபியின் நடிப்பை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி உடனே டாக்டருக்கு போன் பண்ணி வர வைத்து விட்டார்.

உடனே வந்த டாக்டர், கோபிக்கு நல்ல மனநிலை இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அமைய வேண்டும். எந்தவித டென்ஷனும் கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். அதன்படி ஈஸ்வரி, பாக்யாவிடம் கெஞ்சும் விதமாக எனக்கு இருப்பது ஒரே பிள்ளை அவன் என்னுடன் இங்கே இருந்துட்டு போகட்டும் பாக்கியா என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார். உடனே இந்த பாக்கியாவும், ஈஸ்வரி கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டார்.

ஆனாலும் கோபி போட்டு டிராமாவிற்கும், ஈஸ்வரி வைத்த செக்கிருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக பாக்யா ராதிகாவே பேசாமல் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டால் ஈஸ்வரியும் அடங்கி விடுவார். கோபியின் ஆட்டமும் குறைந்து விடும் என்பதற்கு ஏற்ப ராதிகா, பாக்கியா வீட்டிற்கு வந்தால் தான் இவர்களுடைய ஆட்டம் மொத்தமாக அடங்கும். கடைசியில் கோபிக்கு ராதிகாவும் இல்லாமல் பாக்கியாவும் இல்லாமல் தன்னந்தனியாக இருக்கும் நிலைமை தான் வரப்போகிறது.

Trending News