சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக இருந்தாலும் தனக்கு என்று தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று போராடி வருபவர். தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 20 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இப்படி இருக்க, கடந்த வருடம் விவகாரத்து செய்தியை வெளியிட்ட இவர்கள், சமீபத்தில் விவாகரத்தும் பெற்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் Follow செய்து வருவதை தொடர்ந்து, இவர்கள் விவாகரத்து செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் திடீரென விவாகரத்து செய்துவிட்டார்கள்.
எனக்கு அந்த Feelings சுத்தமா வந்தது இல்ல..
இப்படி இருக்க, இவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒரு மரியாதை நிமித்தமாகவும், குழந்தைகளுக்காகவும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “நான் தனியா தான் இருப்பேன். அப்படி இருப்பது தான் நல்லது. தனிமை எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக உள்ளது. காரணம் தனிமையில் இருப்பவர்கள் தான் உண்மையில் பாதுக்காப்பானவர்கள். அவர்களை யாராலும் அச்சுறுத்த முடியாது.”
“என்னிடம் உனக்கு அப்படி தனியாக இருக்க போர் அடிக்காதா? என்று கேட்பார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு feelings இதுவரை வந்தது இல்லை.” என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள், அப்போதே இவர் தனுஷால பாதிக்கப்பட்டிருக்கிறார். அதான் தனிமைக்கு பழகி கொண்டிருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.