சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ராதிகாவிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் கொடுக்கும் ஈஸ்வரி.. பாக்கியா விட்ட ரைடில் தலைதெரிச்சு ஓடப்போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக ராதிகா, பாக்யா வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஈஸ்வரி, கோபியை நீ பார்க்க கூடாது என்று ராதிகாவை தடுக்கிறார். இதை பார்த்த பாக்கியா அந்த உரிமை உங்களுக்கு இல்லை, அவங்க அவங்களுடைய கணவரை பார்க்க வந்திருக்கிறார். நீங்க தடுத்து தேவையில்லாத பிரச்சினையே பண்ண வேண்டாம் என்று சொல்லி ஓரமாக உட்கார வைத்து விட்டார்.

உடனே ரூம்குள் இருந்த கோபியை பார்க்க ராதிகா போய்விட்டார். ராதிகாவை பார்த்ததும் கோபி மூணாவது மனுஷங்க கிட்ட பேசுற மாதிரி நீ எப்படி இருக்கிற மயூ எப்படி இருக்கிறார் என்று நலம் விசாரிக்கிறார். உங்களுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது தானே, அப்படி என்றால் நீங்கள் ஏன் வீட்டில் வந்து எங்களை பார்க்கவில்லை. எங்க நினைப்பே உங்களுக்கு இல்லையா என்று ராதிகா கேட்கிறார்.

அதற்கு கோபி, நீ என் இப்படி கேட்கிறாய் நான் எப்பொழுதும் உங்களுடைய ஞாபகத்தில் இருக்கிறேன். இன்னும் உடம்பு சரியாகவில்லை தனியா என்னால் எங்கேயும் வர முடியாது என்று சொல்கிறார். அப்படி என்றால் பார்க்குக்கு மட்டும் வந்தீங்க, அதுவும் பாக்கியவுடன் தனியாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கோபி நான் அம்மாவுடன் வந்தேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

அத்துடன் பாக்கியா என்னை நல்ல கவனித்துக் கொள்கிறார், எனக்காக சமைத்து கொடுக்கிறாள் என்று கோபி சொல்லிய நிலையில் ராதிகா முகம் வாடி போய்விட்டது. உடனே ராதிகா சரி நான் போயிட்டு வரேன் என்று கிளம்பி போகும் பொழுது பாக்யாவை அலட்சியமாக பார்த்துவிட்டு போய்விட்டார். பிறகு ஈஸ்வரி, ராதிகாவை பார்த்து அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து கோபியை தொந்தரவு பண்ணாத.

இப்பொழுது தான் கோபி நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறான். அந்த சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக நீ வந்து விடாதே, அவனுக்கு ஒரு நல்லது பண்ணனும் என்று நினைத்தால் தயவு செய்து அவனை விட்டு பிரிந்து விடு. அவனுக்கு விவாகரத்து கொடுத்து விட்டால் உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது என்று சொல்லி ராதிகாவிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சியான ராதிகா எதுவும் பேச முடியாமல் அப்படியே போய்விட்டார். வீட்டுக்கு போனதும் கோபி, ஈஸ்வரி மற்றும் பாக்கிய அனைவரும் நடந்து கொண்ட விஷயத்தை நினைத்து பார்த்து இனி நாம் கோபி வாழ்க்கையில் தலையிட வேண்டாம். மயூவை கூட்டிட்டு தனியாகவே போய்விடலாம் என்று முடிவெடுக்க போகிறார். அடுத்ததாக கோபி, செழியனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து விடுகிறார்.

பின்பு கோபி, செழியன், இனியா மற்றும் ஈஸ்வரி அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு எல்லோரும் போன நிலையில் கோபி மற்றும் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த பாக்யா, கோபியிடம் நானும் கொஞ்சம் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி சந்தோஷத்தில் நீங்கள் தனியாக பேசிக் கொள்ளுங்கள் நான் உள்ளே போகிறேன் என்று போய்விடுகிறார்.

அடுத்ததாக பாக்யா மற்றும் கோபி பேச ஆரம்பித்த நிலையில் கோபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பாக்கிய விசாரிக்கிறார். கோபி நான் நன்றாக இருக்கிறேன் சரியாகிவிட்டது என்று சொல்கிறீர் அப்படி என்றால் ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்.? உங்கள் வீட்டுக்கு போக வேண்டியது தானே, பாவம் உங்கள் மனைவி அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் அலையறாங்க.

அதிலும் உங்களை பார்ப்பதற்கு இந்த வீட்டுக்கு வரும் பொழுது உங்க அம்மாவும் இந்த வீட்டில் இருப்பவர்களும் அவர்களை அவமரியாதையாக பேசி நடந்து கொள்கிறார்கள். இதெல்லாம் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா? உங்க மனைவி உங்களை நம்பி வந்திருக்காங்க அவங்களுடைய சந்தோஷத்தையும் மரியாதையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

நீங்களே இந்த வீட்டை விட்டுப் போனால் நன்றாக இருக்கும், இல்லை என்றால் நானே ஏதாவது முடிவு பண்ணி உங்களை அனுப்ப வேண்டியதாக இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோபியிடம் காரசாரமாக பாக்கியா பேசிவிட்டார். இதனால் அவமானப்பட்ட கோபி நிச்சயம் பாக்யா விட்டுவிட்டு கிளம்புவதற்கு முடிவெடுத்து விடுவார். ஆனால் கோபியை தடுக்கும் விதமாக ஈஸ்வரி மற்றும் இனியா ஏதாவது தில்லாலங்கடி வேலையை பார்க்க போகிறார்கள்.

Trending News