Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஹோட்டலில் பிஸியாக வேலை பார்த்து வரும் பாக்கியா பேங்க் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பிறந்த நாளை தெரிவிக்கிறார். இதை கேட்டதும் செல்வி அக்கா, அப்படி என்றால் நாளைக்கு உன்னுடைய பிறந்த நாளா என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று பாக்கிய சொன்ன நிலையில் என்ன ஸ்பெஷல் என்று செல்வி கேட்கிறார்.
அதற்கு பாக்கிய அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிய நிலையில் நானே என்னுடைய பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சினிமா என்று என் பையனை கூட்டிட்டு வெளியே போயிட்டு வருவேன். நீ எல்லாம் ஒரு தொழிலதிபர் ஆகிவிட்டாய், ஆனாலும் உன்னுடைய பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்கிறாய் என்று போற போக்கில் சொல்லி விடுகிறார்.
இதை கேட்டதும் பாக்யா, ஆமாம் நான் ஏன் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகி விட்டார். அந்த வகையில் தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் கூப்பிட்டு கேக் கட் பண்ணி பிடித்த உணவுகளை சமைத்து நாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதற்காக லிஸ்ட் தயார் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இனியா மற்றும் செல்வியிடம் விஷயத்தை சொல்கிறார். உடனே இனியாவும் நானும் மறந்துவிட்டேன் உங்களுடைய பிறந்த நாளை என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா ஒன்னும் பிரச்சனை இல்லை நாம் இந்த பிறந்த நாளை நன்றாக கொண்டாடலாம் என்று சொல்கிறார்.
இதன் பிறகு இனியா, கோபி இடம் என்கூட கடைக்கு வரவேண்டும் எனக்கு கிப்ட் வாங்கணும் என்று கூப்பிடுகிறார். உடனே ஈஸ்வரி யாருக்கு கிப்ட் கொடுக்கணும் என்று கேட்கிறார். அப்பொழுது இனிய, அம்மாவுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை பெருசாக கொண்டாடப் போகிறார், அதனால் அம்மாக்கு தான் கிப்ட் வாங்கணும் என்று சொல்கிறார். உடனே கோபி ஆமாம் பாக்யாவுக்கு பிறந்தநாள் மறந்தே போச்சு என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் பாக்யா கடைக்கு போயிட்டு வந்து புதுசாக வாங்கின புடவையை ஈஸ்வரிடம் காட்டுகிறார். உடனே ஈஸ்வரி நீ என்ன சின்ன பிள்ளையா பிறந்த நாள் கொண்டாட போகிறாய். எப்படி எல்லாரும் முன்னாடியும் வெக்கமே இல்லாமல் கேக் கட் பண்ண போகிறாய். இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா என்று கேட்கிறார். அதற்கு நான் எந்த தப்பும் பண்ணவில்லையே எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் பண்ணுகிறேன் என்று சொல்லி ஈஸ்வரியை கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார்.
இதனை தொடர்ந்து எப்படியாவது பாக்யா மற்றும் கோபியை மறுபடியும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று ஈஸ்வரி கோவிலுக்கு சென்று பூஜை பரிகாரம் செய்ய போகிறார். அந்த வகையில் பாக்கியாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் வரப்போகிறார்கள். அப்பொழுது ஈஸ்வரி எல்லோரும் முன்னாடியும் கோபி மற்றும் பாக்கியா மறுபடியும் ஒன்று சேரப் போவதாகவும் கல்யாணம் பண்ண போவதாகவும் சொல்லப் போகிறார்.
இதை எதிர்பார்க்காத பாக்யா, இது என்னடா என்னுடைய பிறந்தநாளுக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப பாக்கியாவின் பிறந்தநாளுக்கு ஈஸ்வரி இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறேன் என்ற பெயரில் தலையில் இடியை தூக்கி போடப் போகிறார். ஆனாலும் எதற்கும் அசராத பாக்கியா, மறுபடியும் ஈஸ்வரிடம் ஏதாவது டயலாக் பேசிவிட்டு கோபியுடன் தான் அதே வீட்டில் குப்பை கொட்டுவார்.
ஆனாலும் ஈஸ்வரி நினைத்தபடி பாக்யா, கோபியுடன் சேர வாய்ப்பே இல்லை. அந்த வகையில் பாக்கியா, கோபியை கூடிய சீக்கிரத்தில் வீட்டை விட்டு அனுப்பி நடுத்தெருவில் நிற்க வைக்கப் போகிறார். இந்த ஈஸ்வரியால் ராதிகாவும் பிரிந்து போய்விட்டார் கோபியும் யாருமில்லாமல் தனியாக நிற்கப் போகிறார்.