புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் டிவியை தூக்கி எறிந்த சீரியல் நடிகை.. ஜீ தமிழும் கைவிட்ட பரிதாபம்

சின்னத்திரை தொடர்கள் என்றால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தான். ரசிகர்கள் அன்றாடம் பார்க்கும் சீரியலில் உள்ள நடிகர், நடிகைகளை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பாவிக்கிறார்கள். அடுத்த நாள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்படி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போன ஒரு நடிகை பல வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி இருந்தார். அவர் நடித்த சீரியல் அந்த நடிகைக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதுமட்டுமின்றி விஜய் டிவி தன்னுடைய அடுத்தடுத்த தொடர்களிலும் அந்த நடிகையை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர்.

Also Read :பாரதியை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்ட கண்ணம்மா.. இதுதானா உடன்கட்டை ஏறுதலா?.

ஆனால் அந்த தொடரில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அந்த நடிகை சென்றார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசனில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து மிர்ச்சி செந்தில் உடன் இணைந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அத்தொடரில் அவரது கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காததால் இத்தொடரில் இருந்து விலகி விட்டார்.

Also Read :பெரிய பிரச்சனையை கிளப்பி விட்ட சக்களத்தி.. பதிலடி கொடுத்த மருமகள்

அதன் பிறகு ஜீ தமிழில் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் சாதனா என்ற தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் விஷ்ணு நடித்த வந்தார். இந்நிலையில் இத்தொடர் தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரக்ஷிதா அடுத்த எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் உள்ளார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக விஜய் டிவியிலேயே இருந்திருந்தால் அடுத்தடுத்த சீரியலில் ரக்ஷிதாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்கள். ஆனால் விஜய் டிவியை உதறி தள்ளிவிட்டு சென்றதால் தற்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

Also Read :பிரிவைப் பற்றி பேசிய ரக்ஷிதா.. ஒரு பொண்ணுக்கு இத்தனை சோதனையா

Trending News