வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கலைஞரின் நூறாவது விழாவிற்கு விஜய் வருவது உறுதியானது.. அரசியலில் நுழைவதால் ரொம்பவே பொறுப்பு வந்துட்டு

Vijay will come to the kalaingar’s centenary: திமுகவின் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி திமுக சார்பில் மற்றும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட திரையுலகம் சார்பாகவும் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு அதற்கான தேதியும் 24-12-2023 என்று வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் மக்கள் ரொம்பவே அவதிப்பட்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக வைக்க முடியாது. அதுவும் தமிழக முதல்வர் மக்களுக்கு நிவாரண பணிகளை வழங்குவதில் ரொம்பவே பிஸியாகி இருந்ததால் அவராலும் கலந்து கொள்ள முடியாததால் வருகிற சனிக்கிழமை “கலைஞர் 100” கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சினிமா ஆர்டிஸ்ட்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதால் ஒவ்வொருவருக்கும் நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்கள் நடிக்கும் படங்களின்  படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர்களால் வர முடியுமா என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Also read: எங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்கடா, லோகேஷுக்கு எதிராக வழக்கு.. கமல், விஜய் படத்தால் ஏற்பட்ட சிக்கல்

முக்கியமாக நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி வெளிநாட்டில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் மற்ற நடிகர்களும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தற்போது மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் தரப்பிலிருந்து ஒரு செய்தி வெளியாயிருக்கிறது. அதாவது கலைஞர் நூறாவது விழாவிற்கு கலந்து கொள்வாரா என்று சந்தேகத்தை எழுப்பிய நிலையில் அவர் வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

அதாவது GOAT படத்தின் சூட்டிங் வெளிநாட்டில் முடிவடைந்ததால் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் வரை சென்னையில் தான் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கலைஞர் நிகழ்ச்சிக்கு விஜய் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் விஜய் ரொம்பவே பொறுப்புணர்வுடன் எல்லாம் விஷயத்தையும் செய்து வருகிறார். முக்கியமாக அரசியலில் நுழைவதால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பொறுப்பு வந்துவிட்டது.

Also read: புட்டியை தொட்டதால் கெட்டு போன நடிகர்.. வெங்கட் பிரபு டீம்மை கலைத்த தளபதி

Trending News