வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜயகாந்துக்கு கொரோனா, மூச்சு விடுவதில் சிரமம்.. வெளியான அறிக்கையால் பரபரப்பில் திரையுலகம்

Vijayakanth’s Health Condition: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் சில நாட்களுக்கு முன்பு தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தேமுதிக செயற்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. மேலும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அது குறித்து வெளிவந்துள்ள அறிக்கையில் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

Also read: மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. பதறிப்போன தொண்டர்கள், தேமுதிக வெளியிட்ட அறிக்கை

இந்த அறிவிப்பு தான் இப்போது திரையுலக வட்டாரத்திலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த கேப்டனுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கிறது. இதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வேண்டுதல்களை வைத்து வருகின்றனர்.

vijayakanth-health
vijayakanth-health

ஏற்கனவே உடல் நலம் சரியில்லாத வரை பொதுவெளியில் அவருடைய மனைவி அழைத்து வந்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கும் அவர்தான் காரணம் என்ற ரீதியிலும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Also read: காலம் கொடுமையானது, விஜயகாந்த்தை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்.. தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளர்

Trending News