திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

டிஆர்பி-யில் முதல் 5 இடங்களை பிடிக்கும் ஒரே சேனல்.. அதிரிபுதிரியாக வெளியான இந்த வார சீரியல் ரேட்டிங் லிஸ்ட்

கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் ஐந்து இடத்தை ஒரே சேனல் தான் பெற்றிருக்கிறது.  10-வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும், 9-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும் உள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முட்டி மோதி டிஆர்பி-யில் 7-வது இடத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்திருக்கிறது. 6-வதுஇடத்தை அதே சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் பெற்றுள்ளது. புதிதாக துவங்கப்பட்ட இந்த சீரியல் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

சுந்தரி: சன் டிவியின் சுந்தரி சீரியல் டிஆர்பி-யில் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த காலத்தில் இரண்டு திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும் என்பதையும், கணவரால் உதாசிங்கப்படுத்திய மனைவி எப்படி துணிச்சலாக எதிர்நீச்சல் போடுகிறார் என்பதையும் இந்த சீரியல் அருமையாக காட்டிக் கொண்டிருக்கிறது.

Also Read: டிஆர்பி போனதால் அதிரடியாக வரவுள்ள 2 பிரம்மாண்ட நிகழ்ச்சி.. 4 ஷோக்களுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி

எதிர்நீச்சல்:தற்போதைய சூழலில் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஒவ்வொரு நாளும் பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் ஆதிராவின் திருமணத்தை பயங்கர ட்விஸ்ட்டுடன் இயக்குனர் திருச்செல்வம் மிக அருமையாக சீரியலை கொண்டு செல்கிறார். இந்த சீரியலுக்கு டிஆர்பி-யில் 4-வது இடம் கிடைத்திருக்கிறது

வானத்தைப் போல: அண்ணன் தங்கையின் பாச போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கணவர் மனைவிகளுக்கு இடையே ஆன ரொமான்ஸ் காட்சிகள், சண்டை சச்சரவுகள் என காரசாரமாக சென்று கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் டிஆர்பி-யில் 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Also Read: 15 நாட்களில் புருஷனை மாற்றும் சன் டிவி நடிகை.. கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தி 2வது கணவர்

இனியா: சன் டிவியில் கணவன் மனைவியாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் டிஆர்பி-யில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் சஞ்சீவ் கயல் சீரியலின் மூலம் சன் டிவியின் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் அவருடைய நிஜ மனைவி ஆலியாவும் இனியா என்ற புத்தம் புது சீரியலில் சிறப்பாக நடித்து, அதை டிஆர்பி-யில் 2-ம் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

கயல்: நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என நிறைய படங்களில் நாம் பார்த்திருந்தாலும், இந்த சீரியலில் அதிரடி சண்டை காட்சிகளுடன் விறுவிறுப்பாக கதைக்களத்துடன் தன்னுடைய தோழியை காதலியாக மட்டுமல்ல மனைவியாக மாற்றுவதற்கும் கதாநாயகன் படும் பாடு கொஞ்சம் நெஞ்சமல்ல. சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலான இந்த சீரியல் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து பல மாதங்களாக அதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: விவாகரத்திற்கு பின் 2 மாத கைகுழந்தையுடன் சூட்டிங் வந்த திவ்யாவின் புகைப்படம்.. அனுதாபம் தேட இப்படி ஒரு பொழப்பா?

இவ்வாறு மொத்த டிஆர்பி லிஸ்டின் டாப்10 இடத்தில் 7 இடங்களில் சன் டிவி சீரியல் மட்டுமே உள்ளன. என்னதான் முயற்சி செய்தாலும் விஜய் டிவி டிஆர்பி-யில் வர முடியவில்லை. மற்ற சேனல்களான ஜீ தமிழ் கலர்ஸ் போன்ற சேனல்கள் லிஸ்டிலேயே இல்லை.

Trending News