செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூர்யாவை விட பெரிய மனசு என நிரூபித்து காட்டிய அமீர்.. மிக்ஜாம் புயலுக்கு வாரி வழங்கிய ராஜன்

Surya, Karthi and Ameer: ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த சென்னை மக்களும் ஏதாவது ஒரு வகையில் இயற்கை சீற்றங்களால் பெரும் ஆபத்துக்குள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் மழையுடன் கூடிய பெருத்த புயல் காற்று அழுத்தத்தால் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படும் அளவிற்கு பெரும் துயரத்துக்கு தள்ளிவிட்டது.

எப்போதுமே ஆபத்தில் உதவுபவர்கள் தான் உண்மையான ஹீரோவாகவும், கடவுளுக்கு நிகராகவும் பார்க்கப்படுவார்கள். அந்த வகையில் சென்னை மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பில் தன்னார்வலர்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இந்நிலையில் சினிமா துறை சார்ந்த பல பிரபலங்களும் முதலமைச்சரிடம் நிதி உதவியை வழங்கினார்கள்.

அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி இரண்டு பேருமே சேர்ந்து சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரடியாக உதவ முடியாத காரணத்தினால் முதலமைச்சரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவுமாறு பெருந்தொகையை வழங்கினார்கள். இது ஒரு விதத்தில் பாராட்டுத்தக்க விஷயமாக இருந்தாலும், இவர்களை விட என்னுடைய மனசு பெரிய மனசு என்று நிரூபித்துக் காட்டிவிட்டார் இயக்குனர் அமீர்.

Also read: அமீர் தயாரிப்பாளராக தோற்றுப்போன 3 படங்கள்.. பல கோடி கடனால் தெருகோடிக்கு வந்த ராஜன்

அதாவது உதவி செய்வதில் சிறியது பெரியது என்பது எதுவுமே இல்லை. ஆனாலும் தற்போது அமீர் வருமானமே இல்லாமல் ரொம்பவே கஷ்டத்தில் இருக்கும் பொழுது கூட அவரால் முடிந்தவரை 10 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்தது பெரிய விஷயம் தான். அப்படி இருக்கும் பொழுது சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் நினைத்து இருந்தால் இன்னுமே மக்களின் துயரத்தை துடைத்திருக்கலாம்.

ஏனென்றால் சூர்யா ஒரு படத்திற்காக 50 கோடி மற்றும் கார்த்திக் 30 கோடி என சம்பளம் வாங்கும் இவர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தது ரொம்பவே கம்மி தான். அதே நேரத்தில் அமீர்க்கு சரியான வாய்ப்புகளும் இல்லை, சினிமாவில் நல்ல மார்க்கெட்டும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பத்து லட்ச ரூபாய் தொகையை வாரி வழங்கியது பாராட்டுத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதில் இன்னொரு விஷயத்தையும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதாவது எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் இருக்கும் மத்தியில் சூர்யா கார்த்தி செய்தது பெரிய விஷயம் தான். சில நடிகர்கள் எதுவுமே செய்யாத பட்சத்தில் இவர்கள் இந்த உதவிகளை செய்திருப்பது பெரிய நடிகர்கள் என்று ரசிகர்களால் சொல்லப்படும் அவர்களுக்கு புத்தியில் உரைக்கும் படியாக இவர்களின் செயல்கள் அமைந்திருக்கிறது.

Also read: களி மண்ணாய் இருந்தவர்களை செப்பு சிலையாய் மாற்றிய அமீர்.. நன்றி கெட்ட உலகமடா?.

Trending News