வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க மனோஜ்.. வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய முத்து, திருட்டு முழி முழிக்கும் விஜயா

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்று சொல்வதற்கு ஏற்ப மக்களின் மனதை குளிர வைத்துவிட்டது. என்னமா இந்த ரோகிணி ஓவரா ஆட்டம் போட்டுச்சு. மொத்தமா ஆப்பு வச்சாச்சு. அதாவது தன்னுடைய கணவர் தான் நல்ல படிச்சு பெரிய உத்தியோகத்தில் இருந்து சம்பாதிக்கிற மாதிரி வீட்டில் இருப்பவர்களை மட்டம் தட்டி வந்தார்.

அதுலயும் அடிக்கடி மீட்டிங் இருக்குது, லேட்டா ஆச்சுன்னா என்ன ஆகும் என்று மனோஜ் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வீட்டையே ரெண்டு ஆக்கி அனைவரையும் ரணகள படுத்தினார். ஆனால் தற்போது மனோஜ் என்ன பண்ணுகிறார் தினமும் அவருடைய வேலை என்ன என்று மொத்த வண்டவாளத்தையும் தண்டவாளம் ஏற்றிவிட்டார் முத்து.

அதாவது முத்து சவாரியை இறக்கிவிட்டு மனைவியின் பூக்கடை விஷயமாக ஒவ்வொருவரிடமும் மார்க்கெட்டிங் பண்ணி வந்தார். அந்த நேரத்தில் பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு சென்று அங்கே இருப்பவர்களிடமும் நோட்டீசை கொடுத்து வந்தார். அப்பொழுது எதேர்ச்சியாக முத்து கண்ணில் மனோஜ் தென்பட்டு விட்டார். இவனுக்கு இங்கு என்ன வேலை என்று முத்துக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் மறைமுகமாக இருந்து நோட்டம் போட ஆரம்பித்தார்.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சிங்கபெண்ணிடம் தோற்றுப் போன எதிர்நீச்சல்

அதன் விளைவாக மனோஜ் அங்கே தூங்குவதும் விளையாடுறதும் சாப்பிடுவதும் கடலை போடுவதும் போன்ற வேலைகள் செய்து வந்ததை முத்து அப்படியோ வீடியோ எடுத்து விட்டார். வீடியோ எடுத்த முத்து சும்மாவா இருப்பாரு. நேரா வீட்டுக்கு போயிட்டு அனைவரது முன்னணியிலும் அந்த வீடியோவை டிவியில் ஒளிபரப்பு செய்து விட்டார்.

இதை பார்த்த ஸ்ருதி, ரோகிணி இடம் என்னங்க உங்க வீட்டுக்காரர் இந்த மாதிரி மட்டமான வேலையை பண்ணிக்கிட்டு இருக்காரு. இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு நீங்க சப்போர்ட் பண்ணுனீங்க என்று நல்லா உசுப்பேத்தும்படி பேசுகிறார். இதனால் வாயை மூடிக்கிட்டு எதுவுமே சொல்ல முடியாமல் அப்படியே ரோகிணி கூனிக்குறுகி போய் அவமானத்தில் நிற்கிறார்.

இந்த நேரத்தில் சரியாக மனோஜ் உள்ளே நுழைந்து வீட்டில் நடந்தது எதுவும் தெரியாமல், ஓவராக அலப்பறை செய்ய ஆரம்பித்து விட்டார். பிறகு மறுபடியும் அந்த வீடியோவை போட்டு காண்பிக்க எதுவுமே பேச முடியாமல் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார் மனோஜ். இதையெல்லாம் பார்த்தும் தெரிந்து தெரியாத மாதிரி திருட்டு மொழியாக முழித்துக் கொண்டிருக்கிறார் விஜயா. சும்மாவே முத்து காலில் சலங்கை கட்டிக்கிட்டு ஆடுவாரு, இப்போ அவர்கிட்ட தொக்கா ஒரு விஷயம் மாட்டிக்கிட்டு இனிமேல் தான் வச்சு செய்யப் போறாரு.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Trending News