புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வயிற்றெரிச்சலின் சம்பள பிரச்சனையை இழுத்து விட்ட டான்ஸர்கள்.. நாசுக்காக பதிலடி கொடுத்த லலித்

Leo Movie: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்களிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் இதிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்ததால். முக்கியமாக நான் ரெடி தான் வரவா பாடல் வெளிவந்த போது ரசிகர்கள் மனதை குளிர வைத்து அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் தாறுமாறாக இருந்தது.

இதனை தொடர்ந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இன்னும் அதிகமாகவே படத்திற்கு எதிர்பார்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளும் அவ்வப்போது பூகம்பமாக வெடிக்கிறது. அதையெல்லாம் தாண்டி என்ன நடந்தாலும் பரவாயில்லை அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகும்.

Also read: தயங்கிய விஜய், கட்டாயப்படுத்திய லோகேஷ்.. ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

அதே மாதிரி பிரிமியர் ஷோவும் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி 1000கோடி வசூலை எடுக்காமல் விடமாட்டோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இப்படத்தில் ஆடிய டான்ஸர்கள் அவர்களுடைய சம்பளப் பிரச்சினையை முன்வைத்து வருகிறார்கள். அதாவது மொத்தமாக 1200 டான்ஸ் மாஸ்டர்கள் இதில் ஆடி இருக்கிறார்கள். ஆனால் 200 டான்ஸர்கள் மட்டும் முறையாக நடன சங்கத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 4000 ரூபாய் மற்றும் 750 ரூபாய் பேட்டா என்று மொத்தமாக 5000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக எத்தனை நாட்கள் வேலை பார்த்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ற மாதிரி கணக்கு போட்டு மொத்த சம்பளத்தையும் டான்சர்களுக்கு தயாரிப்பாளர் லலித் செட்டில் பண்ணி விட்டார். இதற்கு அடுத்து நடன சங்கத்திலிருந்து வராமல் தின கூலியாக வந்து ஆடிய டான்ஸ்ர்கள் மொத்தம் 1000 பேர்.

Also read: விஜய் கூடவே இருந்து குழிப்பறித்த ரெண்டு இயக்குனர்கள்.. கமுக்கமாக இருந்து காய் நகர்த்தும் கலாநிதி

இவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 800 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் எந்தவித பைசாவும் பாக்கி இல்லாமல் கணக்கு பார்த்து தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். ஆனால் இப்ப என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றால் இவர்களுக்கும் அதே சம்பளமாக வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதை கேள்விப்பட்ட லலித், இது முறையான ஒரு விஷயம் கிடையாது. இதுதான் ரூல்ஸ் என்று வரையப்பட்ட விஷயத்தை பொறுத்து தான் நான் உங்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறேன்.

இதில் எந்தவித பாக்கியம் நான் வைக்கவில்லை. அப்புறம் எப்படி நீங்கள் இன்னும் அதிகமாக கேட்கிறீர்கள் என்று நாசுக்காக டான்ஸ்ர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர்கள் ஆட வரும் பொழுது இதுதான் ரூல்ஸ் என்று சொல்லி தான் கூப்பிட்டு இருக்கிறார்கள். அவர்களும் எல்லாத்துக்கும் சம்மதம் என்று தலையாட்டி விட்டுட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது முரண்டு பிடிப்பது நியாயமே இல்லை. அதற்கு ஏற்ற மாதிரியும் தயாரிப்பாளர் சாதுரியமான பதிலை கொடுத்திருக்கிறார்.

Also read: மனநோயாளி லோகேஷ், சுயநினைவு இல்லாத விஜய்.. லியோவால் வலுக்கும் கண்டனம்

Trending News