திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி விட்டது. அதில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான வாரிசு முதல் பாடலான ரஞ்சிதமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விஜய், ராஷ்மிகா மந்தனா இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட அந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அதன் பிறகு சிம்புவின் குரலில் வெளியான தீ தளபதி பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ரஞ்சிதமே பாடலுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பாடலை அஜித்தின் சில்லா சில்லா பாட்டு ஓரம் கட்டி இருக்கிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also read: துணிவு பாடல் வெளியானது.. ரஞ்சிதமே பாடலை ஓரம் கட்ட வந்த சில்லா சில்லா

அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் தான் வெளியாக இருக்கிறது. ஆனால் வாரிசு படத்திலிருந்து கொடுக்கப்பட்ட அப்டேட் அளவுக்கு துணிவு படத்திலிருந்து எந்தவித அப்டேட்டும் வராமலேயே இருந்தது. இதுவே படம் பற்றிய சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் இப்போது வெளிவந்த பாடல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டது.

அந்த வகையில் நேற்று அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தப் பாட்டுக்காக நேற்று காலை முதலே சோசியல் மீடியா மிகவும் பரபரப்பாக இருந்தது. மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியான இந்த பாடல் சில நிமிடங்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Also read: தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம் பிரபல ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பியா.? அடக்கொடுமையே!

அதிலும் விஜய்யின் ரஞ்சிதமே பாடலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி இப்பாடல் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. எப்படி என்றால் ரஞ்சிதமே பாடல் வெளியான 60 நிமிடங்களில் 500k லைக்குகளை பெற்றிருந்தது. ஆனால் துணிவு முதல் பாடல் 60 நிமிடங்களில் 565k லைக்குகளை வாரி குவித்துள்ளது. அந்த வகையில் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருக்கிறார்.

இதைத்தான் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாக்கள் தெறிக்க விட்டுள்ளனர். ஏற்கனவே விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் பிரளயமே ஏற்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், அப்டேட்டுகள் வெளிவந்த போது துணிவு திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பெருமளவில் கலாய்த்து வந்தனர். தற்போது துணிவு படத்தின் இந்த சாதனை அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read: அஜித் நடித்த ரீமேக் படங்களின் முழு லிஸ்ட்.. வெற்றி தோல்வியை வைத்து ஒரு அலசல்

Trending News