புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பூமர் அங்கிளையே பொளந்து கட்டிய வில்லங்கமான பார்ட்டி.. எதிர்நீச்சலில் அண்ணனை காப்பாற்றுவாரா தம்பி?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிராவின் காதல் விவகாரம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் குணசேகரன் மற்றும் கதிர் ஆகிய இருவரும் காவல் நிலையம் வரை சென்றுள்ளனர். அப்படியும் அடங்காமல் ஓவர் திமிரை காட்டிய குணசேகரன் தற்பொழுது தர்ம அடி வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அண்ணனின் ஆட்டத்திற்கு துணையாக இருந்து வருகிறார் கதிர். அதிராவிடம் பேசியதற்காக எஸ் கே ஆரின் தம்பியை வெளுத்து வாங்கியுள்ளார். அதிலும் நடுரோட்டில் வைத்து அருணை அடித்த சம்பவம் தற்பொழுது எஸ் கே ஆர் இன் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

அதனைத் தொடர்ந்து தங்களின் தம்பியை அடித்து, குடும்ப மானத்தை வாங்கியதற்காக குணசேகரனை சிறையில் வைக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ் அதிகாரி இடமே தனது வார்த்தைகளால் பதம் பார்த்த இவர் நியாயத்தை பேசாமல் அநியாயத்தை மட்டுமே பேசி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் எஸ் கே ஆர் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரின் தம்பியிடமே கடுமையாக விலாசியுள்ளார் குணசேகரன். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இவர் தனது அடி ஆட்களுடன் குணசேகரனை அடித்து நொறுக்குகிறார். இந்நிலையில் அந்த வழியாக வந்த ஞானசேகரன் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

மேலும் அண்ணனின் மீது உள்ள பாசத்தால் மனம் மாறி ஞானசேகரன் உதவி செய்து விடுவாரோ என்று தோன்றுகிறது. இது ஒரு புறம் இருக்க ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தங்கையை பற்றி, நினைத்து கூட பார்க்காமல் வரட்டு கௌரவத்திலிருந்து வருகிறார். ஆதிராவின் உடல்நிலை தேறிய நிலையில் தற்பொழுது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அண்ணனை பற்றி மனம் நொந்து பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஞானசேகரன், அண்ணன் அவமானப்படுத்தியதை மறந்துவிடக்கூடாது என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதிராவின் திருமணத்தை அருண் உடன் தான் நடத்த வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வருகின்றனர். அதிலும் குணசேகரனின் வாய்க்கொழுப்பால் இன்னும் நிறைய இடங்களில் அடி வாங்க போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Also Read: எல்லாருமே அரைகுறை நாய்ங்க.. அசிங்கப்படுத்தியதால் கொந்தளித்த எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News