வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஐட்டம் டான்சராக இருந்த தேவயானியை மாற்றிய அந்த ஒரு கேரக்டர்.. மரண ஹிட்டடித்த படம்

தமிழ் சினிமாவில் நம்ம வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன் குடும்ப பாங்கான கேரக்டரில் அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தேவயானி. அதிலும் குழந்தை போல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அவருடைய பேச்சு அனைவரையும் ஈர்க்கும்.

காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் கமலி என்னும் கேரக்டரில் நடித்த தேவயானி இன்னும் ரசிகர்களின் மனதில் கமலி ஆகவே வாழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தேவயானி சில திரைப்படங்களில் கிளாமர் காட்சிகளில் நடித்து வந்தார்.

தொட்டாசினிங்கி என்னும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அந்த திரைப்படத்தில் ஓவர் கிளாமராக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து அஜித், பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் திரைப்படத்திலும் அவர் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான சிவசக்தி திரைப்படத்தில் ஐட்டம் டான்சராக ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடலில் தேவயானி மிகவும் குட்டையான உடையில் டான்ஸ் ஆடியிருப்பார்.

அதன்பிறகு கேமராமேனாக இருந்த தங்கர்பச்சான், தேவயானிக்கு காதல் கோட்டை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதுவரை கிளாமர் ரோலில் நடித்து வந்த தேவயானி காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் குடும்பபாங்கான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் காதல் கோட்டைக்கு முன்பு அவர் நடனமாடிய சிவசக்தி திரைப்படம் சில காரணங்களால் காதல் கோட்டை திரைப்படம் வெளியான சில மாதங்களுக்குப் பின் தான் வெளியானது. இதனால் தேவயானியை இப்படி அரைகுறை ஆடையில் பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் தேவயானி அந்த மாதிரி ரோலில் நடிக்காமல் தற்போது வரை குடும்ப பெண் தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும்போதே தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார்.

Trending News