புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காதல் ஹீரோவை காணாமல் போக வைத்த பேரரசு.. விஜய் மாதிரி வர ஆசைப்பட்டு வில்லனாக மாறிய பரிதாபம்

Perarasu and Vijay: ஒருவருடைய வெற்றி எல்லா இடங்களிலும் அவர்களை தூக்கி நிறுத்தும் என்று சொல்வார்கள். அதேபோல் விஜய் சினிமாவில் தொடர்ந்து வெற்றி அடைந்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜெயித்துக் காட்டி இருக்கிறார். இவரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி நிறைய பேர் நாமும் இதே மாதிரி வெற்றி பெற வேண்டும் என்று உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

ஆனால் நினைத்தபடி எல்லாமே நடக்குமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். அப்படித்தான் காதல் ஹீரோ ஒருவர் அறிமுகமான முதல் படத்திலேயே அசைக்க முடியாத வெற்றியே பெற்றார். தொடர்ந்து இதேபோன்று காதல் மற்றும் ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த அவர் விஜய் மாதிரி மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அதற்காக விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றிய இயக்குனரிடம் தஞ்சம் அடைந்தார். அந்த இயக்குனரும் ஹீரோ ஆசைப்பட்ட மாதிரி ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் அந்த ஹீரோவின் கேரியரை தொலைக்கும் அளவிற்கு ஃபெய்லியர் படமாக மாறிவிட்டது. படத்தை இயக்கிய இயக்குனர் வேறு யாருமில்லை பேரரசு.

கேரியரை தொலைத்த காதல் ஹீரோ

இவரிடம் தஞ்சம் அடைந்த ஹீரோ காதல் பரத். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு நடித்து நல்ல பெயர் வாங்கி வித்தியாசமான படங்களில் பரத் நடித்து வந்தார். திடீரென்று விஜய் மாதிரி ஆக்சன் ஹீரோவாக வர வேண்டும் என்று இயக்குனர் பேரரசு இடம் கேட்டிருக்கிறார்.

அப்படி இவர்கள் கூட்டணியில் வந்த படம் தான் பழனி. ஆனால் இந்த படம் பரத்தின் கேரியரை காலி பண்ண வைக்கும் அளவிற்கு சொதப்பிவிட்டது. இதனால் பரத்துக்கு மார்க்கெட் குறைந்து வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. தற்போது இப்படியே சும்மா இருந்தால் சரியா இருக்காது என்று வேறு வழி இல்லாமல் வில்லனாக நடிப்பதற்கு அவதாரம் எடுத்து விட்டார்.

அந்த வகையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவருடைய மகன் விஜய் முத்தையா நடிக்கப் போகும் படத்துல வில்லனாக பரத் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். பெரிய ஹீரோவாக வரவேண்டிய பரத், விஜய் மாதிரி வரவேண்டும் என்ற ஆசைப்பட்டு தற்போது இந்த நிலைமைக்கு ஆகிவிட்டார். இதுதான் காலத்தின் கட்டாயம் என்று சொல்வார்கள் போல.

Trending News