அழகும், திறமையும் வாய்ந்த அந்த நடிகைக்கு கோலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைத்த அந்த நடிகை அடுத்தடுத்த திரைப்படங்களால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
அதன் காரணமாகவே அவருக்கு பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அந்த வாய்ப்புகளை எல்லாம் கெட்டியாக பிடித்துக்கொண்ட நடிகை தன்னுடைய திறமையால் அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைக்கு சமீப காலமாக நேரமே சரியில்லை.
Also read:அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்காத அந்த நடிகை தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் கடைசியாக அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிய அளவில் ஓடவில்லை.
இதனால் அவருடைய மார்க்கெட்டே காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய திறமையான நடிப்பால் முன்னணி நடிகைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.
Also read:டாக்டருடன் ரகசியமாக நடந்த 2ம் திருமணம்.. அம்பலமான நடன இயக்குனரின் அந்தரங்க லீலை
அது மட்டுமல்லாமல் இனிமேல் பாலிவுட்டில் இவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லையாம். இந்த விஷயம் தெரிந்ததால் தான் நடிகை ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டாராம். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் தோல்வியும், அவமானமும் ஏற்பட்டு வருவதால் நடிகை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சென்றுவிடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.
வேறு வழியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு திரும்பும் நடிகை இங்கேயே அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த இருக்கிறாராம். அதனால் நடிகையை இனிமேல் அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாராம்.
Also read:காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!