வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கள்ளக்காதல் பட நடிகை என கூப்பிடுறாங்க.. குப்பையான கதையால் கேரியரே தொலைத்த பரிதாபம்

நடிகர், நடிகைகளை பொறுத்த வரை படத்தில் தோன்றும் கதாபாத்திரம் கொண்டே, மக்களிடம் பெரிதும் பேசப்படுவார்கள். நடிப்பை காட்டிலும் ஏற்கும் கதாபாத்திரம் மனதில் நங்கூரமாய் நின்று விடும். அதேபோல் தமிழ் சினிமாவில் கள்ளக்காதல் பட நடிகை என கூறப்படும் நடிகை ஒருவரை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தெலுங்கு படமான துனிகா துனிகா என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். இவர் சிறந்த மாடலும் ஆவார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவரை ஹீரோயினாய் பார்க்காமல் கள்ள காதல் பட நடிகையாய் வாய்ப்பு கொடுத்தார்கள்.

Also Read: ஸ்டாண்ட் அப் காமெடியனுடன் கிசுகிசுக்கப்படும் ஏஜென்ட் அமரின் காதலி.. அப்ப விஜய் சேதுபதி இல்லையா?

அதற்கு உதாரணமாக தமிழில் இவரின் முதல் படம் தான் வழக்கு எண் 18/9. இப்படத்தில் ஆர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசியமாய் டேட்டிங் செல்வது மற்றும் தகாத உறவு வைத்திருப்பது போன்று நடித்திருப்பார்.

அதைத்தொடர்ந்து இவர் ஏற்ற ஆதலால் காதல் செய்வீர் படமும் இதேபோன்று தான் கதை அமைந்திருக்கும். மேலும் 2015 திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறு கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார் மனிஷா யாதவ். இப்படத்திலும் ரகசியமான காதல் உறவை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read: அலப்பறை தாங்காமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சிவக்குமார்.. ஓவரா கூவியதால் துவம்சம் செய்த சூர்யா

அதை தொடர்ந்து 2018ல் ஒரு குப்பை கதை என்னும் படத்தில் தினேஷ், மனிஷா யாதவ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு தன் கணவன் மேற்கொள்ளும் பணியை பிடிக்காமல், தன் ஆசையை வேறொருவருடன் தீர்த்துக் கொள்ள துணியும் கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ் நடித்திருப்பார்.

மேலும் சென்னை 28 பாகம் 2 படத்தில் ஐட்டம் டான்சர் ஆக இடம்பெற்று இருப்பார். இவர் படத்தில் ஒன்று காதல் செய்து கர்ப்பமாகி ஏமாறுவது இல்லை என்றால் கள்ளக்காதலில் ஈடுபடுவது இது போன்ற கதை அம்சம் கொண்ட வாய்ப்புகளே இவருக்கு வந்தமையால், சினிமாவே வேண்டாம் என தெறித்து ஓடிவிட்டார் மனிஷா யாதவ்.

Also Read: கட் அவுட் பிரச்சனையில் முளைத்த திடீர் திருப்பம்.. அஜித்தை பாலோ செய்யும் சூர்யா

Trending News