திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் படமும், அஜித் குமாரின் படமும் மோத இருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு இந்த சந்தோசமான தகவலை உதயநிதியின் ரெட் ஜியான்ட் மூவிஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அஜித் படமும், விஜய் படமும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு இதேபோன்று பொங்கல் அன்று மோதின. விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படமும் 10 ஜனவரி 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே குடும்ப பின்னணியை கொண்ட கதையாக இருந்தது. அஜித், விஜய் இருவருக்குமே இந்த படங்கள் மாஸ் திரைப்படமாக அமைந்தன.

Also Read: வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவுடன் வரும் உதயநிதி.. கலெக்ஷன் பயத்தில் இருக்கும் தியேட்டர் அதிபர்கள்

விஜய்க்கு வாரிசு 66வது படம், மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய்க்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே உருவாகி கொண்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது. இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

அஜித்திற்கு துணிவு 61 வது படம் துணிவு. நேர் கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

Also Read: ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதில் இருந்தே ஒட்டு மொத்த சினிமா வட்டாரமும் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து கொண்டிருந்தது. வாரிசு ரிலீஸ் முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

thunivu-release-date-ajith-kumar
thunivu-release-date-ajith-kumar

அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வாரிசு vs துணிவு பொங்கல் வைரலாகி கொண்டிருக்கிறது. பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இனி இந்த படங்களின் நிறைய அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.

Also Read: தலைவா போல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு.. முடிஞ்சா ரிலீஸ் பண்ணி பாரு என சவால்

Trending News